#Sunday_topic 25-05-22
#எங்க_வீட்டு_தங்கத்தேரு
"ஓரம் போ..ஓரம் போ ..அகிலா பொண்ணு சைக்கிள் 🚴 வருது.."
ஆமாங்கோ....ஸ்டேஷன் கிட்ட இருந்த வாடகை வீட்லேர்ந்து ..சொந்த வீடு போலாம்னு ...ஊருக்கு ஒதுக்குப்புறமா போனதும்..முதல் வேலையாக் கத்துண்டது இந்த சைக்கிள்.
" அக்கம் பக்கம் பார்க்காதே..
ஆளைக் கண்டு மிரளாதேனு"confidence கொடுத்து ..நாளே நாளில் குரங்கு பெடல்லேர்ந்து கும்முனு உட்கார்ந்து ஓட்ட வெச்ச எங்க அண்ணனுக்கு ஜே..💪💪💪
சத்தியாகிரகம் பண்ணி சைக்கிள் வாங்கி.." காத்து வாங்கப் போறேன்..உனக்கு கடுகு வாங்கி வந்ததேன்"னு..அம்மா கொடுத்த வேலையெல்லாம் ஓ(ட்)டி ஓ(ட்) டி உழைச்சு வாங்கிக் கொடுப்பேன்.🚲🚲🚲
சைக்கிள்.. தான்...அதுல
அகிலா பாட்டுதான்..
"ரெக்கை கட்டி பறக்குதிந்த அகிலாவோட சைக்கிள்னு" எங்க புது ஏரியா பொண்ணுக எல்லாம் பொறாமையா பார்க்க ஆரம்பிக்க
"இந்த வாழ்வினிலே ஆனந்தம்..இந்த சைக்கிள் தரும் இன்பம்னு'....எல்லரையும் ஏங்க வைக்க...
"ஊரைத் தெரிஞ்சிகிட்டேன்..
உலகம் புருஞ்சிகிட்டேன்னு..'
துள்ளித் திரிய ஆரம்பிச்ச போது..
கவலை ஒண்ணு எட்டி பார்த்தது.
சிங்கிளா சைக்கிள்ள போனால் சுகமா இல்லையே..சைக்கிள் கூட்டணி அமைத்து ..அதில் ஒரு பேரணி நடத்த ஆசை தோன்ற....
காலனியில் ஒவ்வொரு ஃப்ரண்ட் அம்மா கிட்டயும் போய்..
சைக்கிள் ஓட்டுவதன் சைக்காலஜி பேச ஆரம்பிச்சேன்.
என் வீட்டு ஹீரோவின் ( சைக்கிளின்) டயர் எல்லாம் கேட்டுப் பார்..நான் சுத்திய கதை சொல்லுமேனு தோழிகளை உசுப்பேத்த..
அப்புறம் என்ன?..
"எட்டு போடு..எட்டு போடு..நம் சைக்கிள் கொடுத்த மகிழ்ச்சிக்கில்லை தட்டுப்பாடு..
எத்தனை சந்தும் கண்டோம்
எத்தனை எத்தனை பொந்தும் கண்டோம்
அத்தனையும் சுத்தி வந்தோம்..கூட்டம் போட்டு'...
ஆள் அரவரமில்லாத ரோட்டில தான்..நம்ம ஆராய்ச்சி எல்லாம்.
சைக்கிள் ரேஸ் .பாய்ஸ் செக்ஷனல உண்டு.
தியாகம் படம் சிவாஜி கணேசன் மாதிரி ' 'நல்லவர்க்கெல்லாம் ..
சாட்சிகள் ரெண்டு..ஒண்ணு ..
மனசாட்சி.."..
மிதி..மிதினு ..அவர்கள் வியர்வை சொந்த
நாங்க cheer girls .💃💃💃💃
இப்பொ ஒரு விரல்ல செல்ஃபோன் டைப்பிங் மாதிரி..
ஒரு கை விட்டு சைக்கிள் ஓட்டி..
' ஓஹோ..மேகம் வந்ததோனு ஃப்ரண்டு கூட மழைல தொப்ப்லா நனைஞ்சு..aahaa..
" வாடிக்கை மறந்ததும் ஏனோ??' நு வாடகை சைக்கிள் அண்ணா எல்லாம் புலம்பினாங்க பாவம்.
"சார்..உங்க பொண்ணை கொஞ்சம் மெதுவா ஒட்டச் சொல்லுங்க..பார்க்கவே பயமா இருக்கு"..uncles எல்லாம் என்னிடம் தோற்ற சோகத்தில் அப்பாக்கிட்ட கோழி மூட்டுவாங்க.😄😄😄
காலம் ஓட..
மகள் முதல் முதலில்.." அம்மா சைக்கிள்ள உன்ன doubles அடிக்கிறேன்"..சொன்னபோது ரொம்ப happy.❤️
"மணி ஓசை கேட்டு எழுந்து..சைக்கிள்
மணி ஓசை கேட்டு எழுந்து'..
லீவு நாட்கள்..இன்னும் leave ஆகலை மனசிலிரிந்து.
சாரதியாய் சகட்டு மேனிக்கு சந்தோஷம்.
ஸ்கூட்டர் கார் ஓட்டினாலும்..
இந்த சைக்கிள் தந்த சந்தோஷம் இருக்கே..ஆஹா..
"ஐம்பதிலும் ஆசை வரும்..ஆசையுடன் பாசம் வரும்.."
இந்த சைக்கிள் பார்த்தாலே ஒரு காதல் தான்.
US போனபோது. Facebook office ல வெச்சிருந்த சைக்கிள பொண்ணோடு ஓட்டினது செம்ம ஜாலி.
தங்க ரதம் தான்..மனதில்
தங்கிய ரதம் தான்..
மிதி பல வாங்கி..எனக்கு மகிழ்ச்சி 😃 தந்த ரதம் தான்.
No comments:
Post a Comment