Thursday, October 5, 2023

Madhyamar-மறைந்து_போன_மறக்க #முடியாதவை.

 #Sunday_topic 16-12-22


#மறைந்து_போன_மறக்க #முடியாதவை.



நான் ரொம்ப மிஸ் பண்ணுவது..


இழுத்துப் பிடிச்சு உட்கார்த்தி வைத்து..நமக்கு தலை பின்னி விடுவாங்களே..

ஆஹா..


இரட்டை பின்னல் லாவகமாம போட்டு..

அதை மடித்துக் கட்டிக் கொண்டு போன பள்ளி நாட்கள்.


அதுவும் அப்படியே சீப்பால் ,மெதுவாக சிக்கெடுத்து..ஆ...ஊனு ..பொய்யா கத்தி ஆர்ப்பாட்டம் செய்து..

இப்படியும் அப்படியும் தலையை வேண்டுமென்றே ஆட்டி...

யாராவது தலை வாரி விட்டால்..ஒரு சுகம் இருக்கும் பாருங்க..அது ..சொர்க்கம்..


அப்படியே சொக்கும்..தூக்கம் தாலாட்டும்.


அசக்காதடினு ...அன்பா ஒரு அதட்டல் கேட்கும்.

பின்னலுக்கு உட்காரும் முன்பே ..ரிப்பன் ரெடியா இருக்கணும்..அப்ப தான் கரெக்ட்டான நேரத்தில் நீட்ட முடியும்.

இல்லாட்டா..பின்னல் லூஸாகி..திரும்பியும் முதல்லேர்ந்தானு ஆரம்பிக்கணும்..


அந்த ரிப்பன் எல்லாம் ஒரு டப்பாக்குள்ள அழகா சுத்து வெச்சிருப்போம்.


ஸ்கூல் நாளில் கறுப்பு ரிப்பனும்..ஸ்போர்ட்ஸ் டே க்கு வெள்ளை ரிப்பன்.


ஆனால்..வெளியே போகணும்னால்..

நோ..மடித்துக் கட்டல்.


கொஞ்சமா நுனியில் முடியை விட்டுட்டு..

 ..கலர் கலர் ரிப்பன்.

 

 அதை சும்மா ஏனோ தானோனு இழுத்து போடாமல். அழகா பட்டர்ஃப்ளை மாதிரி போட்டுக் கொள்ளும்போது ..

 ஜாலியா இருக்கும்.


இப்போ இப்படி ஒரு சர் ..அப்படி ஒரு சர்ருனு வாரிக் கொண்டு ...ஒரு ரப்பர் பேண்ட் போட்டுண்டு..ஓட்டம் தான்.


குழந்தைகளிடம்..

கண்ணுங்களா..

தலை வாரிப் பூச்சூடி உன்னை..

பாடசாலைக்கு அனுப்பினேண்டா..

அகிலா..உன் அன்னைனு..பாட்டு பாடினால்.


அவங்களோ...

அம்மா..அது அந்தக் காலம்..அது அந்தக் காலம்னு எச பாட்டு பாடறாங்க..


அதே போல...

பூ வெச்சு தச்சு ஒரு ஃபோட்டோ கண்டிப்பா எல்லார் வீட்லயும் இருக்கும்..


நல்ல மல்லிப்பூ கனகாம்பர சீஸன்ல ஜம்முனு பூ தச்சு...வேலை மெனக்கெட்டு ஃபோட்டோ ஸ்டுடியோ போய் ..ஃபோட்டோ எடுத்ததெல்லாம் இப்போ சொன்னால்...


அம்மா..அதுதான்..உனக்கு இதெல்லாம் மறக்கக்கூடாதுனு ..

மத்யமர்ல சங்கர் சார் டாபிக் கொடுக்கறாரே..அது போறாதா?


புலம்புத் தீர்த்துடும்மா..

பொண்ணு எஸ்கேப்..😄


படத்தில் இருக்கற பாட்டி கூட பாருங்க..

எவ்வளவு சமத்தா... But கொஞ்சம் சோகமா..


' நான் உனக்கு தலை வாரி விடலாம்னு நினைச்சால்...நீ ..என் வெள்ளி முடியில்..விந்தை காண்பிக்கப் போகிறாயானு" ஒரு மைண்ட் வாய்ஸுடன்..

No comments: