Thursday, October 5, 2023

Madhyamar-க்ஷணநேர_முடிவு

 #sunday_topic 02-06-22

#க்ஷணநேர_முடிவு


இதுதான் உன் முடிவா???

(மெளனராகம் கார்த்திக் டயலாக் மாதிரி இருக்கா??


நான் கொடுத்த பேப்பரை கையில் வைத்தபடி..


Should I sign ? Are you sure?

You have few seconds left.

பேனா மூடியை slow motion ல் திறந்தார். 

பேனா எழுதுகிறதா என்று பக்கத்திலிருந்த பேப்பரில் செக் செய்வது போல...பாவ்லா செய்தார்.


" அகிலா.. இந்த க்ஷணத்திலும் உன் முடிவை மாற்றலாம்"..மனசு உள்ளுக்குள் பேச..


" please sign sir" என்றேன்.


என் ராஜினாமா கடிதத்தை மிகுந்த ஏமாற்றத்துடன் கையெழுத்திட்டார் என்னுடைய மிக உயர் அதிகாரி.


You are an asset நு நினைப்பேன்.. இப்படி அசடு மாதிரி....


' இல்ல சார்..பாஷை புரியா ஊர். கைக்குழந்தையை காப்பகத்தில் விடற மனசில்லை'..என்றேன்.


க்ஷண நேரத்தில் முடிவை மாற்றி இருந்திருந்தால்..???


இன்று..

அடிக்கடி உள்ளுக்குள் எட்டிப் பார்க்கும் இந்த்க் கேள்வி.

பசங்களோடயே ஓடிக் கொண்டே இருந்தாலும்...

ஒரு நிமிஷம் ஓய்வா உட்காரும்போது...இன்னிக்கு அந்த வேலையில் இருந்திருந்தால் என்ன பதவியில் இருந்திருப்பேன்னு ...யோசனை வரும் போகும்.


யோசித்து எடுத்த முடிவு தான் என்றாலும்..க்ஷண நேரத்தில் மாற்றி இருக்கலாம். The ball was in my court..but..எல்லாம் நன்மைக்கே..


இப்படி சோக க்ஷண முடிவுகள் இருக்க...சைடில் கைக்கோர்த்து வரும் சில காமெடி 

 க்ஷண நேர முடிவுகள் ..flashback ல் ஓடும்..


நானொரு ராசியில்லா ராஜா (ணி)...

ஆமாங்கோ..ரொம்ப யோசிச்சு ஒரு முடிவு எடுப்பேன்..

மூச்சு வாங்கி எல்லாம் முடிக்க..ஃபணால்னு ஒரு சத்தம் நம்ம ஹார்ட்ல கேக்கும்..

" தப்பு பண்ணிட்டியே அகிலானு"..


ஒழுங்கா நகற க்யூல நின்னுகிட்டு இருக்கும் போது..க்ஷண நேரம் புத்தி பேதலிக்கும்..பக்கத்து க்யூல்ல போய் நின்னு.....


கரெக்டா தெரியும் பதிலுக்கு...க்ஷண நேரம் வரும் சந்தேகத்தில் ..கோட்டை விட்ட மார்க்குகள் ஏராளம்.


இந்த க்ஷணம் வேணும்னு அடம் புடிச்சு வாங்கின ட்ரஸ்..அட்ரஸ் இல்லாம..அலமாரி அடியில் ஒளிச்சு வைச்சு..திட்டு வாங்கினது...பெரிய லிஸ்ட்..


ஆனா..அடுத்த முறை..


" இது தான் உன் முடிவா???"

கார்த்திக் ஸ்டைலில் கேட்டது..என்னோட வூட்டுக்காரர் தான்.


ப்ராஜக்ட் வழ்க்கையில்..எங்க சைட் ..மாறிண்டே இருக்கும்.


டெஹ்ராடூன் லேர்ந்து .. குஜராத்  சைட் .ஒரே ஒரு ஸ்கூல்


 என் பெண்ணை 9 th std . very crucial. என்ன செய்யறதுனு ஒரே குழப்பம்.

எப்பவுமே..இவர் இருக்கும் சைட்க்கு சில கிலோ மீட்டர் தொலைவில் குழந்தைகள் ஸ்கூலுக்காக வீடு பார்த்து நான் தனியா இருப்பேன். இவர் weekend வந்துட்டு போவார். நாங்களும் நினைச்ச போது போய் பார்க்கற மாதிரி இருக்கணும்னு ஒரு முடிவு.


ஆனா..இந்த சைட்ல அங்கேயும் இருக்க முடியாது.. பக்கத்திலயும் இருக்க  முடியாத ஒரு கஷ்டம்.


என்ன செய்யறது இப்போ?..


நாள் பூரா ஸ்கூலுக்கு அலைந்து விட்டு.. ..கெஸ்ட் ஹவுஸில் வந்தவுடன்..

நேர அங்க இருந்த சாமி வெச்சிருந்த இடத்தில உட்கார்ந்து pray பண்ண ஆரம்பிச்சேன்.


என்னனே தெரில..

டக்குனு எழுந்து என் வீட்டுக்காரர் கிட்ட போய்...' அப்பா..நானு குழந்தைகளோட பெங்களூர்ல இருக்கேன்"..


க்ஷண நேரம் ..எடுத்தாச்சு முடிவு.


எங்க அம்மா ...."அது என்ன ரெண்டுங்கெட்டானா பெங்களூர்..பேசாம சென்னை வந்துடு'..


உண்மையா சொல்றேன்..ஏன் அப்படி தோணித்துனு தெரில.

ஆனால்..கடகடனு பெங்களூரில் வீடு, ஸ்கூல் எல்லாம் கிடைச்சது..


அம்மாவும் அப்பாவும் பெங்களூரின் weather enjoy பண்ண வந்தார்கள்.


என் மாமியாரை..என் நாத்தனார் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் இருந்த காடு மேட்டுல டாக்டர் வசதி அதிகம் கிடைக்காது என்பதால்.

மாமியாரும் என்னோட வந்து இருக்க ஆரம்பிச்சா.


Kahaani mein twist.. இவருக்கு Hyderabad transfer. Second and fourth Saturday அவரும் வந்துடுவார்.


க்ஷண நேர முடிவில் கிடைத்த சந்தோஷ நாட்கள்.


மீண்டும் ஒரு திருப்பம்.

மாமியார் உடல் நிலை மோசமாகி எங்களை விட்டுப் பிரிந்தார்.ஆனால்..நான் கூடவே இருந்து அவரை கவனித்துக் கொண்ட சந்தோஷத்தில் கண்ணை மூடினார்.


அம்மாவுக்கும்..மருந்தே இல்லாத உடம்புக்கு வந்து...அம்மாவை கூட்டிக் கொண்டு வந்து..பார்த்துக் கொண்டேன்..அவளும்...


எனக்கு இப்படி உன்னோட இருக்க முடியுமானு ஏங்கிண்டு இருந்தேன்..அது நடந்துடுத்து என்று சொல்லி..கண் மூடினாள்.


நான் ..வேற எங்கியாவது போய் இருந்திருந்தால் ...இந்த ரெண்டு ஜீவன்களை கவனிக்கும் பாக்கியம் விட்டுப் போயிருக்குமேனு..


அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன்.


அவன் தானே எல்லாம் நடத்திக் கொடுப்பவன்.


நான் எடுத்த க்ஷண முடிவு என்று பெருமையாக நினைத்தாலும்..

' உனக்கு கடமைகள் இருக்குனு ..என்னைக் கொண்டு வந்து சேர்த்தது அவன் தானே..🙏🙏🙏


என் பொண்ணு 12th ல Bangalore topper.

Happy moments தான்

No comments: