Thursday, October 5, 2023

Madhyamar-சித்திரம்_பேசுதடி

 #சித்திரம்_பேசுதடி..June 2022



என் கேள்விக்கென்ன பதில்.


(இந்த ஓவியத்தை ..எங்க வூட்டுக்காரர் கிட்டயும்..எங்கப்பா கிட்டயும்  காண்பிச்சால் இப்படித்தான் கதை கதையா சொல்லுவாங்களோ..)


கல்யாணம் ஆகி வந்த நாளிலிருந்து இப்படித்தான்..


பல் தேய்த்து வந்ததுமே..

" "ஏங்க..காஃபியா..டீயா..ஹார்லிக்ஸா ..எது கலக்கட்டும்? '


" ஏம்மா..தினமும் இதே கேள்வியா?..சரி..இன்னிக்கு காஃபியே கொடுத்துடு..'..

ஈஸியா இருக்கும் உனக்கு..


'ம்ம்ம்ம்.. காஃபி டிகாக்‌ஷன் போட லேட்டாகும்.. உங்களுக்கு ஹார்லிக்ஸே சுறுக்க கலந்து கொடுத்துடறேன்..ஒகே தானே..


ஙே....


அதுக்கு எதுக்கு பின்ன option இத்தனை கொடுக்கற்மா..


கேட்க முடியுமா?..😄😄😄


இதோ இதோ..

ஹார்லிக்ஸை ஆத்திண்டே என் பக்கத்தில வரா..வரா..


அடுத்து செட் கேள்விக் கணைகள் தொடுப்பாள் பாருங்க..


' இட்லிக்கு வெங்காய சட்னியா.???

.🍅 சட்னியா.. இல்ல தக்காளி வெங்காயச் சட்னியா?


"தக்காளி வெங்காயச் சட்னியே பண்ணிடுமா.."


"அதுல அப்படியே நாலு வேர்க்கடலை போடட்டும்மா..?


"சரிம்மா..பேஷா இருக்குமே.."


" சிவப்பு மிளகாவா..பச்சை மிளகாவா?...


"காரமே இல்லாம..

அரைச்சுடு..போதும்மா..."


" சரிங்க..இந்த சட்னி ..நாளைக்கு செய்யறேன்..இன்னிக்கு மிளகாய்ப் பொடியும் தயிரும் போட்டு சாப்பிடுங்க..ஓகே தானே..


" அதுக்கு எதுக்கும்மா இத்தனை கேள்வி...கேட்டுட முடியுமா?


ஒரு வழியா ..டிஃபன் கடை முடிந்து ..சாப்பாடு ஆரம்பிக்கும் நேரம்..


' ஏங்க..ரசம் தெளிவா விடவா..கலக்கி விடவா..கலக்கித் தெளிவா விடவா..?..🤣🤣🤔


தேவுடா...நான் கலங்கி நிற்க..🤔🤔


' என் கேள்விக்கென்ன பதில்னு ..கரண்டியும் கையுமா நிற்பா..


சரிம்மா..சாயந்தரம் குழந்தையும் நீயிம் ரெடியா இருங்கோ..கடைத்தெருவுக்கு போய்ட்டு..உன்னோட பிறந்தநாளுக்கு புடவை வாங்கிண்டு வந்துடலாம்..


கடையா..கடலலையா..

அலை மோதும் கூட்டத்தில்..

குழந்தைக்கு காவலாக நான் இருக்க..


' நீ போய் ..உனக்கு பிடிச்ச ஒரு நாலு புடவை எடுத்துண்டு வாம்மா..அதுல ஒண்ணு நான் செலக்ட் செய்யறேன்னு..


அவளை உள்ளே அனுப்பிவிட..


இரண்டு மணி நேரம் கழித்து..நாலைந்து புடவையுடன் பிரசன்னமாவாள்.


' இதில் எது நல்லாயிருக்குனு சொல்லுங்க..


அந்த ப்ளூ ..டெம்ப்பிள் டிசைன் சூப்பர் மா..💪💪


' நல்லாயிருக்கா..ஆனா இப்போ தான் ஞாபகம் வரது .இதே கலர்ல ..உங்க சித்தியோட பேரன் பூணலுக்கு எனக்கு வெச்சு கொடுத்தா..இது வேணாம்ப்பா..


" உன் வலது கையில் இருக்கே ..அந்த மஸ்டர்ட் கலர் சூப்பர்மா..


" ஐயோ..இது mustard ஆ..உள்ளே வேற yellow aa தெரிஞ்சுதே..அப்ப இது வேணாம்ப்பா'..


இருப்பதோ..இன்னும் இரண்டு புடவை..

நான் என்ன செய்வேன்னு..நான் சிவாஜியாக..


" இந்த பிங்க்கே எடுத்துக்கறேன்.."..


' அம்மா..ஏகப்பட்ட பிங்க்க் இருக்கே உன்கிட்ட..'..


" இது different shade ப்பா'..🤔🤔🤔


முடிவு எடுக்கப்படும்..


என்னிக்காவது ஒரு நாள் ...


" ஏன்மா..நீயே எல்லாம் முடிவு பண்ணிட்டு என்னை ஏன் ம்மா..

எல்லாத்துலயும் consult பண்ற மாதிரி பில்டப் கொடுக்கற..


அவள் என்ன பதில் சொல்வாள்..???!!!


அதுவரை இப்படித்தான் ..நான் ..ஙேனு முழிச்சுண்டு நிப்பேன்..🤣🤣


அதுவும் ஒரு சுகம் தானுங்கோ..💪💪💪


அருமை யான ஓவியத்திற்கு நன்றி  திருமதி jayalakshmi kumar mam.


இந்தப் பதிவு  என் வீட்டு இரு தகப்பன்களுக்கு அர்ப்பணம்.


Happy father's day💐💐💐

No comments: