Thursday, October 5, 2023

-பத்து_பத்தா_நம்ம_வாழ்க்கை_பிரிச்சுக்கோ

 #மிட்_வீக்_டாபிக்

#பத்து_பத்தா_நம்ம_வாழ்க்கை_பிரிச்சுக்கோ



அடித்த ஃபோன் கால் எல்லாம் அன்று எனக்கு வாழ்த்து மழை பொழிந்தது.

யோசிக்கவே ஆச்சரியமா இருந்தது..

"எங்க அகிலாவுக்கு அதுக்குள்ள நாற்பது வயசா..? இப்போதான் உன்னை ஆஸ்பத்திரியில் பார்த்த மாதிரி இருக்கு"..மலரும் நினைவுகளுடன். வாழ்த்துக்கள்.


அப்பா வந்தார் லைனில்..

Happy birthday என்றெல்லாம் formal வார்த்தைகள் இல்லை.

Straight ஆ பாய்ண்ட்டுக்கு வந்தார்.


"அம்மாடி..இனிமேதான் கண்ணா..உன் லைஃப்ல ஒரு புது chapter ஆரம்பிக்கப்போறது'..

நாப்பதாவது வயசை எட்டியாச்சு..

" (அப்பா..ஏன்ப்பா இப்ப்டி வயசை சொல்லி டென்ஷனாக்கற?)

"நிறைய பொறுப்புகள் கூடும் நேரம்.

நயமா பேசணும்..

நல்ல சொல்,நல்ல  எண்ணம்  எல்லாம் நம்ம மனசுக்குள் practice பண்ணனும்.

இல்லனா தறி கெட்டு ஓடிடும். அப்புறம் பிடிக்கவே முடியாது.

நல்ல காரியம் செய்ய எதாவது சான்ஸ் கிடைச்சா..விட்டுடாதே.."💪💪


'குழந்தைகளோட நியாயமான கோரிக்கைகளை காது கொடுத்து கேளு.."( அப்பா..நீங்களா..மை.வாய்ஸ்)🤔


அப்பா அட்வைஸ் அடுக்கிக் கொண்டே போக..


புதுப்புடவை  வீட்டுக்காரர் என்ன வாங்கிக் கொடுத்தார்?

குழந்தைகள் எப்படி கொண்டாடினார்கள்..

இப்படி கேள்விகளுடன் பலர் பேச..


அப்பாவுடன் பேசிய அந்த pep talk..இன்னிவரைக்கும் என்னை இயக்கும் ஒரு சக்தியாகும்.🙏


ஃபோன் கட் ஆனாலும்..background ல் அப்பா பேசியது அவ்வப்போது ஒலிபரப்பாகும்.


காரணமே இல்லாம வள்னு விழும்போது..அடராமா..இது என்ன வயசுக் கோளாறானு..

வயிற்றைக் கலக்கும்.😄😄


நிதானம் ..நிதானம்னு மனசு சொன்னாலும்..

வாயும் கையும் பர பரனு எதோ செய்யும்...வயசாறதோனோ..

அப்படித்தான் இருக்கும்னு...யாரோ இடிக்கற மாதிரி இருக்கும்.😄😄


ஆனால்..40 to 50 தான் எனக்கு 

பொன்னான வருடங்கள்.

(அடுத்த பத்து முடிவதற்கு காத்திருக்கணும் இன்னும்..)


உறவு , நட்பு என்று..

அழகான புரிதலில் ..வட்டம் விரிந்தது.

பெண்களின் பெயரோடு அம்மா என்ற பட்டத்தை இணைத்து..

பட்டத்து ராணியாக என்னை பவனி வரச் செய்த என் கண்கள்.

என் இரு பெண்கள்.

நீங்க..அவ அம்மாதானே..

கேட்கும்போதே காலர் உயர்த்திய தருணங்கள்


என் அம்மாவுக்கு கம்யூட்டர் சொல்லித் தந்தது..கை கொடுத்தது அவளுக்கு..வாய் பேச முடியாத நிலை வந்தபோது..


தனக்கென எதுவுமே கேட்காத மாமியாருக்கு..

அவள் கவிதைகளை எல்லாம் திரட்டி..வேற்று மொழி பேசும் மாநிலத்தில் அவள் புத்தகம் வெளியிட்ட போது...சந்தோஷத்தின் எல்லை.


காடும் மலையும் நீரும் நிலமும் என்று.. பூகோளப் பாடத்தை கண் முன் நிறுத்திய ப்ராஜக்ட் வாழ்க்கை..


" இந்த ரொட்டியும் டாலும் பாஸ்மதியும் தின்னு நாக்கே செத்து போச்சேனு ...ஊரு விட்டு ஊர் வரும் டூரிஸ்ட் உறவுக்கும் நட்புக்கும் வாய்க்கு ருசியா ( note the point) வித விதமா சமைத்து கொடுத்த காலம்..😄


'உன் பொண்ணு எங்க உன்னை வந்து பார்த்துப்பா.".அம்மாவிடம் சொன்னவர்கள் ஏராளம்..


"உங்க மாட்டுப்பொண் எங்கேயோ இருக்காளேனு" ..

மாமியாரிடம் பேசியவர்கள்  பலர்.

இந்த இரண்டு ஜீவன்களின் கடைசிக் காலத்தில் என்னை அவர்களிடம் கூட்டி வந்து சேர்த்து ..அவர்களைப் பார்த்துக் கொள்ள வைத்த ..அந்தக் கடவுள் வரம் தந்த வருடங்கள்.


சேவை நிறுவனங்களுடன் கை கோர்த்து ..அகமகிழ்ந்த நாட்கள் ..


Fine tune செய்ய வேண்டிய வயது .இந்த forty என்று புரிய வைத்த அப்பாவின் அட்வைஸ்...


பத்தில்...பந்தாடிய குறும்பும்..

இருபதில்..இளமையின் துடிப்பும்

முப்பதில்..maturity கொஞ்சம் எட்டிப் பார்த்தலும்..

என்று வயது ஓடும் போது..


என் வாழ்க்கையில்..

மூத்த பத்துகளில் கற்றவைகளோடு..

களமிறங்கி.

Left right centre என்று சிக்ஸர் அடித்த 40 to 50.


Retired hurt ஆகி..குமைந்த நொடிகள்.


எல்லாம் அனுபவங்களும் சேர்த்து..புடம் போட வைத்து நாற்பது..


ஒரு பக்கம் என் அப்பாவும்..இன்னொரு பக்கம் என் பெண்களின் அப்பாவும் ..தாங்கிப் பிடிக்க.

அரை சதப் பத்தில்..ஆன்மிக தேடலும் சேர...

அன்பு மயமானது இந்த உலகம்..


எப்படி  பிரித்து பார்த்தாலும்..

போனது போனது தான்..

வருங்காலம் நிரந்தரமில்லை..

இன்றைய நாளே..இனிமை..

So live the present என்றிருந்தால்..


ஒவ்வொரு நாளும் முக்கியம் தான்.

No comments: