#PPAP_1 (20-05-23)
#அந்தாதி
அவளும் நானும்
என் பாட்டு நீ கேளு
கதையோடு கருத்தும் இருக்கு..
இருக்கு கொஞ்சம் இடமென்றே
இட்டேன் சில விதைகளுமே..
விதையும் வளர்ந்து செடியாச்சு
விளைச்சல் இப்போ மூணுபோகம்..
போகத்தில் பாகமும் பிரித்தேனே..
பழுத்த தக்காளியும் எலுமிச்சையும்..
எலுமிச்சை ரசம் கொதிக்க
எண்ணம் போனதே பின்னோக்கி!!!
பின்னொரு காலம் சொர்க்கமன்றோ..???
பின்னி எடுக்கலையே வெய்யிலுந்தான்..!!
வெய்யிலு வந்தும் போனதுவே
வைதல் இல்லாது திரிந்தோமே..
திரிந்த பாலில் திரட்டுப்பாலும்
கறந்த பாலில் காப்பியுமே..
காப்பி ராகம் பாடியபடி
கலகலப்பாய் கூட்டுக் குடும்பம்...
குடும்பம் இப்போ சிறுசாச்சு
குதூகலம் இப்பொ குறைஞ்சாச்சு
குறைஞ்ச வருமானக் குடித்தனத்தில்
நிறைஞ்ச மனசு இருந்ததுவே..
இருந்ததை பங்கிட்டு உண்டோமே..
ஆனந்தம் அதில் கண்டோமே..
கண்டங்கள் தாண்டி குடும்பங்கள்..
காண்பது இப்போ அரிதாச்சு..
அரிதாய் வரும் விருந்தாளிக்கு
பெரிதாய் என்ன சமைப்பேனோ???
சமையல் அறையும் அங்கிருக்கு..
சட்னு செல்லடி என் மீனாளே..!!
No comments:
Post a Comment