Tuesday, November 29, 2016

கொண்டை சேவல் கூவும் நேரம்

தானியம் தேடப் போனேன்..
தனமும் அங்கே கண்டேன்..
கொக்கரக்கோ மறந்தேன்..
கொட்டி இருக்கு பணமென்றேன்..
குறட்டை விட்டவனும்..
குப்பற அடிச்சு ஓடி வந்தான்..
செல்லாத நோட்டை கண்டான்..
சீறி விழுந்தான் என் மேலே
சுத்த அறிவு கெட்டவனே..
சொப்பனத்தில் நானிருந்தேன்..
கத்தையாய் நூறு நடுவில்..
நிம்மதியை கலைத்தேனோ..
நழுவினேன்..அங்கிருந்தே..
நாளை..
கூவலாமா..வேண்டாமா..
குழப்பத்துடன்..நானிங்கே

சகிப்புத் தன்மை

வாயில போடுமுன்னே
வளையல் போடணுமே..
வக்கணையா சமைச்ச கைக்குனு..
விழுங்கி முடிக்கும்....வீட்டுக்காரர்..
சகிப்புத் தன்மை தொடங்குமங்கே

வாரி இறைத்த புடவைக் குவியலில்..
வரிக் குதிரை டிசைன்..
வாங்கினதே இல்லனு..வாங்கி
விமர்சனமே இல்லையேனு..
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்..
சகிப்புத் தன்மை...உண்டிங்கே

amazon ..ஆடித் தள்ளுபடி.
அலுக்காமல்..ஆயிரம் தந்து
அதே செருப்பை வாங்கி..
அப்பா..எப்படி இருக்குனு
அருமை மகள் கேட்க..
அப்பா ..சகிப்புத் தன்மை..

மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு
மாறாத மெனுவுடன்..
மாமியாரும் பறிமாற..
மண்டையாட்டி...
மாறாத அசடு வழிதலுடன்..
மாப்பிள்ளை..சகிப்புத் தன்மை..

senti போடாத..
சிரித்தே மழுப்பும்..
சகிப்புத் தன்மை..
சரிதானே..

Monday, November 28, 2016

அப்படியே சாப்பிடும்..
ஹார்லிக்ஸ் நீ..
அரக்க பறக்கும்..
காபி நான்..
சாந்தம் நீ..
சத்தம் நான்..
பாடல் நீ...
பருப்புப் பொடி நான்..
மாண்புமிகு...
மகரம் நீ..
விஷமில்லா..
விருச்சிகம் நான்..
விவேகம் நீ..
வேகம் நான்..
வலிமை நீ..
வளவள நான்..
பொறுப்பு நீ..
போராட்டம் நான்..
பொறுமை நீ..
புலம்பல் நான்..
கை பிடித்தோம்..அன்று
கடவுள் அமைத்த மேடையில்..
இரும்பு மனிதன் நீ..
இளகும் மனமும் நீ..
சாதுவும்...நீ..
சாமர்த்தியமும் நீ...
ஓயாத அலைகளை
ஒன்றாய் கடப்போம்
சோர்வை எறிந்து
சேர்ந்தே நடந்து..
சோதனைகள் கடந்து
சாதனை படைப்போம்..
சாகரமாம் இவ்வாழ்விலே

Saturday, November 26, 2016

நான் கண்ட பாரதம்

வீரபாண்டிய கட்டபொம்மன் style..
ATM வந்தது முதல்..
எட்டிப் பார்த்தாயா..
paytm வந்ததும்..
bank ஐ மறந்தாயா
fund transfer  வந்ததும்..
friend ஒருத்தர் உண்டா..

card வாங்கியதும்..
courtesy call உண்டா..
cheque எழுதினாயா..
draft எடுத்தாயா..
online  வந்தவுடன்
offline  ஆனவனே..கேள்.

மானேஜரா..கிளார்க்கா..
மரியாதையா..வரிசையில் நில்லு..

(ஐயோ சாமி..கட்ட பொம்மா..கனவில் நீருமா..?)
கொஞ்சம் பின்னோக்கி பார்க்க..

அம்மா சொல்லித் தர.
காசோலையும்.
.கணக்கிருப்பும்..
கடுப்பேற்றினாலும்
கால் கடுக்க நின்று..
கற்ற நாட்கள்..
கை கொடுத்ததே இப்போதும்

வருஷம் பல கடந்து..
வங்கி சென்றபோது..
வரதே இல்லயே இப்போ..
வருத்தமாய் கேட்ட குரல்கள்..
வந்து போகுமே..நினைவில்
வரிசையில் இப்போ..
வசைபாடி நிற்கும்போது..
சுகங்கள் கண்டதால்..
சுருங்கும் முகம் இன்று..

வருங்காலம் ....வரட்டும்
வஞ்சமிலா..லஞ்சமிலா
வழியை உணர்த்தட்டும்..
வலிகள் எல்லாம்..
வலிமை சேர்க்கட்டும்..
வாழ்வு மலரட்டும்..

நெஞ்சும் நிறைந்திடுமே

கொஞ்சும்  குழவியின் மழலை மொழியில்
நெஞ்சும் இங்கு நிறைந்திடுதே..
கூட்டில் வாழும் குருவிகள் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே..
கூடி வாழும் குடும்பம் கண்டு..
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
கும்பிடும் தெய்வம் கண்ணில் தெரிய..
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
இருள் நீக்கும் விடியல் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
வானில் மின்னும் விண்மீன் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
மழையும் நீரும் நதியும் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
காதல் சொல்லும் தென்றல் வருடலில்
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
பனியும் துளியும் படரும் கொடியும்
நெஞ்சும் இன்று நிறைத்திடுதே
மலையும் முகிலும் மோதக் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்தததுவே
பஞ்ச பூதங்கள் புவியைக் காக்க
நெஞ்சும் இன்று நிறைந்ததே..
பாவக் கறைகள் கற்பூரமாய் கரைய..
புது உலகம் ஒன்று பிறந்திடவே..
உண்மை,நேர்மை பொறுமை கொண்டே..
உள்ளங்கள் வெல்ல உழைப்போமே..
நெஞ்சும் நிமிர்த்தி சூளுரை செய்வோம்..
வஞ்சம் லஞ்சம் இங்கில்லை யென்றே..
மனிதமும் மானுடமும் ஓங்கும் தருணம்
நெஞ்சும் நிறையுமே
உண்மையில்..அன்று

before i die


வாசல் திறந்தேன்..
வாடிய.. நீ அங்கே..
வந்தாய் எப்படி...??
வருடினேன் உன்னையே..
மடியும் நாள் வந்தாச்சு..
மூச்சது முடியுமுன்..
உள்ளுக்குள் ஓர் ஆசை..
உவகையில் கேட்டேன்..
உன் உள்ளத்திலுள்ளது..
உதிருமுன் சொல்லென்றேன்..
ஒன்னும் பெரிசா இல்லை..
ஒரு போட்டோ புடி என்றாய்..
பள்ளிகொண்ட பெருமாள் போல்..
படுத்தபடி நீ இருக்க.
பருவப் பெண்ணைப் போல்..
புன்முறுவல் நீ பூக்க..
பிடித்தேன்..படம்
அடைத்தேன்..உன்னை
என் நெஞ்சுக் கூட்டில்..
போய் வா…இலையே
போய் வா..
மீண்டும் நீ வரும்போது..
மண்ணில் இருப்பேனோ
மறக்காமல் சொல்வேன்..
மகளும் அவளிடமே..

வருவாய் நீ என..

Friday, November 25, 2016

குட்டிக் குருவி...வருக வருக

காக்குருவி கூட்டினிலே..
குட்டிக் குருவி ஜனனமின்று...
காத்திருப்பு பல நாளாய்..
கலி தீர்க்க வருவாய் என..
கவி யொன்று புனைந்திங்கே
காலமும் ஆச்சு கண்ணே..
கண் துஞ்சா காத்திருப்பு..
கனவோடு பல ராவும்..
குருவியும் நீ வந்தாய்..
கண்ணீர் இனியில்லை..
காக்கும் கரம் உன்வரவால்
குலமென் தழைக்க வந்த..
குட்டிக் குருவியே..
குதூகல குடும்ப வலைக்குள்
கூடி  உனை வரவேற்கிறோம்..

குட்டிக் கிளை உனக்கும்...நம்
குடும்பமெனும் பெருமரத்தில்..
கூவி  நீ அழையாமலே..
கூடி உனைக் காப்போமே..

பெரியம்மா...நானானேன்
பிடிபடவில்லை..என்
பெருமையின்று..
பேணி உனைக் காப்போமே..
பேரோடும்.புகழும்..
பண்போடும்..அன்போடும்..
பல்லாண்டு வாழ்ந்திடவே..
பாமாலை..சூடுவேனே

மழை வருமோ..

இராத்திரியில் வராதே.
லைட்டும் போய்டுமே.
ராவெல்லாம் படிக்கணுமே..
வேண்டினான்..
பொதுத் தேர்வு மாணவன்..
காலையிலே வராதே..
காஞ்சிபுரம் பட்டுடுத்தி..
கல்யாணம் போகனுமே..
கவலையுடன்..கன்னியுமே..
மத்தியானம் வராதே..
மொறுமொறுனு..
மாவு வடாம் காயனுமேனு..
மாமியும் வேண்டினாளே..
சாயுங்காலம் வராதே..
சோடியோட..
சினிமா போணும்..
சின்னப் பையன்..
சேவித்து நின்றான்..
வெடித்து விரிந்த மண்ணோ..
என் வாசனை வந்து..
எத்தனை நாளாச்சு..
மழையே..
மறுபடியும் எப்போ வருவே..
மனிதக் குரல் கேட்குமுனக்கு..
மண் குரல் விழவில்லையா..
மழையே..வருவாயே..
மழையே வருவாயே..

யாதும் ஊரே யாவரும் கேளிர்

உடன்பிறப்பு இல்லையென
உள்ளூர அழுதேனே.
இருந்தும்...இல்லா
இக்கட்டு ஓரிடம்..
இல்லையென்பதால்..
இழந்தது ஒன்றில்லையென..
தெளிந்தேன்..அன்று..
வாழப் பழகினேன்..
வழங்கத் தெரிந்தேன்..
வானுமோர் எல்லையிலா..
வற்றாத அன்பையுமே..
பூங்குன்றன் பாடல் போல்.
பூந்தோட்டமாய் என் வாழ்வு..
கவிபாடும்..
காயத்திரி பூவும்
கண்டிப்பாய் அதிலுண்டு.
சுருங்கினாலும்..மலர்வோம்..
மணம் பரப்புவோம்..வா..
வெல்வோம்..வா

வெற்றி என் பக்கம்

பூவும் காயும் வித்து
பொழுதும் உழைக்கும் அம்மா..

பட்டம் பெறுவேன்..நானும்..
பட்டத்து ராணி..யாவாய் நீயும்..

வீணாகும் விளக்கு வெளிச்சம்..
விதி எமது மாற்றும்..

விட்டில் பூச்சி நானல்ல..
வீழ்ந்தே மடிய ..பிறப்பல்ல..
வருமிடர் களைந்தே நானும்..
தருவாய் தாங்குவேன் உனையே

கதையாகும்.. கடந்த காலமுமே
கரமுனது பிடித்தே நானும்..
கண்டு களிப்பேனே..அன்று
கையளவு உலகம் இதையுமே..

Tuesday, November 22, 2016

காக்குருவி...கதைகேளு

ஒத்தையா.. நீ
ஒடன்பொறப்பு??
ஒட்டு உறவெல்லாம்..
ஒனக்கெங்கே புரியும்..
மறைவிலும்..முகத்திலும்..
மோவாகட்டை இடித்து பேசி
மனசை புண்ணாக்கிய..
மஹானுபாவர்களுக்கு..
ஒட்டி உறவாடுனதெல்லாம்..
வெட்டியே..வெளியே போக..
ஒத்தை காக்குருவிக்கு
ஊரெல்லாம் சொந்தமாக..தன்
குஞ்சு குட்டிக்கெல்லாம்..
கத்து கொடுத்துச்சாம்..
கூடப் பொறந்தாதான்..
சொந்த பந்தமில்ல..
காட்டு ..உன் அன்பை
கலப்படம் இல்லாம..நீ.

கூவிக் கரஞ்சா போது..
கூட்டம் ஒன்னும் வந்திடுமே..
காலம் போனாலும்..
காக்குருவி எங்கூடு..
கலகலப்பா இருந்திடுமே..
பலகூட்டு பறவைங்க..
பறந்து வந்திடுமே..
விருந்தொன்னு..உண்பதற்கே

Saturday, November 19, 2016

Happy men's day

ஆபீஸிலிருந்து
அந்தி சாயுமுன்
வந்த அத்தான்..
அத்தி பூத்த மாதிரி..
அல்வாவும்...அடுக்கு மல்லியும்
அரை வாண்டுக்கு..
அழகா ஒரு சட்டையும்..
எடுத்து தந்தபடி சொன்னாராம்..
ஆண்கள் தினமாமே இன்னிக்கி..
அதான் வாங்கியாந்தேன்..
அட ராசா..
அதெப்புடி நான் மறந்தேன்..
எதிர்ப்பார்ப்பே இல்லா..
எம்புட்டு நல்ல மனசு..
பெண்கள் தினமுன்னு..
பெருமையா கொண்டாடினது
பொட்டில் அறைஞ்சாப்போல..
நினைவுக்கு வர..
ஆமாம்.. மறந்திட்டேன்..
அவசர வேலையிலே..
அமைதியா...நாஞ்சொல்ல..
அங்க அவரில்லை..
ஏற்கனவே..போயாச்சு..
கிரிக்கெட்டு மேட்ச் பார்க்க

morning click

அந்த வீட்டு கூரையில் மட்டும்..
அப்படி என்ன சுகம் கண்டாய்?
அசையாமல் அசை போடும்..

அந்த நினைவுகள் தான் என்னவோ?

Thursday, November 17, 2016

மை


மை...
அன்று உரிமை..
இன்று கடமை..
நேர்மை வழி நின்று..
கருமை களைவோம்..
பொறுமை காப்போ.

நான் கண்ட பாரதம்

வெள்ள நீரதுவுமே
வீதிியெல்லாம் புரண்ட வேளை
வீடுகளாய் உருமாறிய...
ஏரிபல அறிந்தேன்..அன்று

வெறியாய் சேமித்தது
வெற்றுத் தாளான வேளை..
வரிசையில் நிற்போர் கண்டு..
வழக்கமாய் ..வரும் சந்திலும்
வங்கி உளதென்றறிந்தேன்.. இன்று..

நாளை...
நானறியேன்..
queue  வில் நிற்கும்வேளை
quotes கூட தோணுமோ..

Monday, November 14, 2016

நான் கண்ட பாரதம் ...நேற்று

மூணு நூறு ரூபாய் கையில்.
மூக்கைப் பிடிக்க சாப்பிட ஆசை..
உணவகம் நுழைந்தேன்..
உவகையாய் உண்டேன் ..
சர்வர் வந்தார் பில் கொண்டு..
கர்வமாய் நீட்டினேன் கார்டையுமே..
சர்வர் டவுனு...சொறிந்தார் தலை..
சரியாப் போச்சு.. சங்கடத்தில் நான்..
இருப்பதைக் கொடுத்தால்..
இன்னிக்கு வீடு சேரமுடியாதே..
இக்கட்டில் சிக்கிய நேரம்..
இளையராஜா பாட்டு.
எல்லாரும் மாவாட்ட கத்துகிடணும்
என் மனதில் ஓட..
சகஜமாய் சொன்னார்..
சரி சரி ..நளைக்குத் தாங்க..
மனுசனுக்கு மனுசன்
உதவலனா எப்படி என்றே..

கடன் உறவை முறிக்கும்
கடையில் மாட்டிய போர்டு..
கண்சிமிட்டியது..
என்னைப் பார்த்து..

நான் கண்ட பாரதம்

வீட்டு வேலை எல்லாம் முடித்து
Water bottle biscuit சகிதம்..
வர ரொம்ப நாழியாகும்..
வழி மேல் விழி வைக்க வேண்டாம்..
வங்கியில் இன்று பணமெடுக்கணும்..
வேகமாய் கிளம்பினேன்..
வங்கி வாசல் வரை
கூட்டம் இருந்தது..
குழப்பம் இல்லை..
கத்தல் இல்லை..
சண்டை இல்லை..
தெரியாதவர் ..தெரிந்தவருக்கும்..
தெளிவாய் சொல்லித் தந்தனரே
தரும் ஃபாரம் எப்படி நிரப்ப என்று..
மடமட என்று நகர்ந்தது வரிசை..
மணிக் கணக்காகுமென்ற
மனக்கணக்கு தப்பியது..
அவரவர் உரிமையும்..
அவரவர் கடமையும்..
அவரவர் புரிந்து நடந்தமையால்..
அமைதியாய்...அரங்கேறுகிறது..
அசகாயப்் புரட்சி..
(நான் கண்ட பாரதமிது..என் அனுபவம் இந்த இரண்டு நாளில்)

Happy children's day

போட்டோ புடி என்னை'
பொங்கும் ஆசையில்..என்
பின்னே வந்தாள்.
பிரகாரம் சுற்றினாள்.

நில்லென்றேன்..நின்றாள்..
சிரியென்றேன் சிரித்தாள்..
நல்லா வருமா..என்றாள்
நண்பர்களும் சேர்த்தாள்.


உடுத்திய சீருடை..
உணரவைத்தது..
உள்ளூர் பள்ளியில்
ஒண்ணாம் வகுப்பென்று

வீடெது என்றேன்..
விரல் நீட்டி காட்டினாள்
கோயில் கோபுரம் முன்
குடிசை எனதென்றாள்..

பெயர் கேட்டேன்..
பூரிப்புடன்..
பிரியா..
விஷ்ணுப் பிரியா என்றாள்.

விலாசமிலா ..இவ்
விண்மீன்கள்..
விண்ணை எட்டட்டும்..
வெற்றி வாகை சூடட்டும்..

அடுத்த முறை போகணும்..
அவளிடம் கொடுக்கணும்..
அவளின் முக மலர்ச்சியை..
அழகா படம் பிடிக்கோணும்..

பட்டது மனதில்..
பளிச்சென்று உண்மை
படிக்கும் இவளோ..
படு அதிர்ஷ்ட்டக்காரியென்று

விட்டேன் ஊரை..
வழியில் கண்டேன்..
வழி பிறக்கா
வாண்டுகளை..

மாறுமெப்போ இந்நிலை..

பூ ..கட்டும்.. பூக்கள்
பூமி ஆளட்டும்..
பாத்திரம் விளக்கும்..
பிஞ்சுக் கரங்கள்..
பாரை வெல்லட்டும்..

தம்பியை தாலாட்டும்..
தளிர்கள் பலவும்..
தடையை உடைக்கட்டும்..
தரணி ஆளட்டும்..

கூலிக்காக..
பள்ளி மிதிக்கா..
பாலகரும்..
காலணி துடைக்கும்..
கறுத்த கரங்களும்
காவியம் படைக்கட்டும்

சின்ன பசங்களெல்லாம்
சிறை உடைக்கட்டும்..
சிட்டாய்ப் பறக்கட்டும்
சீறாய் வாழட்டும்..

நமக்கும் பங்குண்டு..
நல்லதை செய்வோமே..
நாலு காசு தருவதை விட்டு
நம் நேரமதை தருவோமே..
நல்ல சமுதாயம் படைப்போமே..





Thursday, November 10, 2016

என் சோகக் கதை கேளு தாய்க்குலமே

என் சோகக் கதைய கேளு தாய்க்குலமே..
அத கேட்டாக்க தாங்காதம்மா..
உங்க மனமே..
இட்லி தோசை விட்டு புட்டு
இத்தாலியனா மாறிப்புட்டேன்..
போண்டாவும் பஜ்ஜியும் ி விட்டு..
பிட்ஸாவும் பர்கர் தின்னேன்..
சாம்பாரும் ரசமும் விட்டு..
சப்ஜியும் டாலும் தின்னேன்..
வெண்டையும் சுண்டையும்  விட்டு..
வெங்காயமும் பூண்டும் தின்னேன்..
சட்டினியும் துவையல் விட்டு..
sauce ம் ketchup ம் தின்னேன்..
ready to eat வாங்கி வந்து..
ரெட்டை சரீரம் நானும் ஆனேன்..

மூணு பேர் இருக்கையிலே..
முப்பது வகை சமையல்் செஞ்சேன்..
லேகியமும் மறந்து புட்டு
மசாலாவில் எறங்கி விட்டேன்..

அண்டா குண்டா வித்துபுட்டு.
ஒவனுக்கு மாறி விட்டேன்..
பளபளக்கும் பாத்திரம் விட்டு..
பிளாஸ்டிக்கை நம்பி கெட்டேன்..

பாட்டி வைத்தியம் பழசு என்று..
டாக்டர் ஃபீஸ் அள்ளிக் கொடுத்தேன்..
வேலையும் அதிக மாச்சு..
வேலைக்கு ஆளை வெச்சேன்..
கம்முனு ..குந்தி..கிட்டு..
ஜிம்மு மட்டும் போய் வந்தேன்..

வாழ்க்கை இங்கே வெறுப்பாச்சு..
வழி ஒன்னும் பபுரியலையே..
கலப்பட உலகத்திலே..
நலம் வாழ வழி உளதோ..
(என் சோகக் கதைய கேளு..)

உறவுகள்..தொடர் கதையல்ல்

அத்தை பாட்டி..
ஆங்கரைப் பாட்டி..

ஆரஞ்சு மிட்டாயோடு..
மஞ்சப் பைக்குள்ளே..
மடிப்பு கலையா
மடிப் புடவையோடு..

கூன்விழுந்தாலும்..
கண் மங்கினாலும்..
குழந்தைகள் என்றால்..
குதூகலம் இவளுக்கு..

எச்சில் பத்து பார்ப்பாள்..
எட்ட நில்லு ..
மடி என்பாள்.
சினிமா டிராமா..
சீச்சீ என்பாள்..

சிவ நாமம் ஒன்றே
சிந்தனையில் கொள்வாள்.
'திரிசூலம் ' பார்த்தோம் என்றால்..
வெள்ளியா..தங்கமா என்பாள்
சிவாஜி படம் என்றால்..
சீறுவாள்...காசு கரியென்பாள்..

வந்த நாள் முதல்..
விரட்டி வேலை வாங்குவாள்..
வயசாகலையா...
வரணும் புத்தி என்பாள்..

சுருக்குப் பைதான்..
சொத்து எனதென்பாள்..
கசங்கிய ஒரு ரூபாய்..
காலணா..எட்டணா..
கணக்கு வைத்திருப்பாள்..

ஒரு வாரம் இருப்பேனென்பாள்..
ஒயாமல்..
ஊர் புராணஞ் சொல்வாள்...
வரேன் போய்ட்டு என்பாள்..
வெளிச்சமாகும் ..எம்முகமே..
விதிகள் தளரும்..கொஞ்சம்
வெறுமையும் சூழுமே..

வரவில்லை ..அவளும்..
வாரங்களான போதும்..
வினவிய போது..
விம்மலுடன்..
விண்மீன் காட்டினர்..
வீட்டுப் பெரியோர்..

புரிதலுக்குமுன்..
பறந்து போன...
உறவுப் பறவைகள்..
உள்ளத்தில் எத்தனையோ..!!

கவலையில்லா..மனிதர்கள்

காய்காறிக் காரம்மா..
ரொம்ப கறாரு தானம்மா.
காசெல்லாம்  வேண்டாம்..
கணக்கு வெச்சிக்கறேன்..
காசோலையா கொடுத்திடு..
கரீட்டா..ஆமாம். ..என்றாள்..
மருந்து கடைக்காரரோ
இருக்கு இன்னும் ரெண்டு நாளு..
இருக்கற ஐநூறு ஆயிரத்தில்
இங்க மருந்தும்..சோப்பும் வாங்கென்றார்..
தையல் காரரோ..
துணி இங்கே இருக்கட்டும்..
பணத்தோட வாங்க என்றார்...
ஊரைச் சுத்திட்டு..
நிலவரம் தெரிஞ்சிண்டு..
வீட்டுக்குள் நுழைய..
வந்தாள் ..
வேலைசெய்யும் லஷ்மியுமே...
ஐநூறும் ஆயிரமும்..
யாரிடமும் வாங்காதே..
செல்லாது இப்போ ...
சொன்ன நேரம்..
சிரித்தபடி சொன்னாள்..
வாங்குற சம்பளம் ..
அட்வான்ஸ் ல கழிஞ்சாச்சு..
எட்டணா கையில் இல்லை..
எங்கிட்டு போவேன்..
ஆயிரமும் ஐநூறும்..
வைத்திருப்பவருக்கே..
வயிறு கலங்கும்..

Tuesday, November 8, 2016

நல்ல மனம் வாழ்க

பேஷா இருந்தது எல்லாம்..
புல்லரித்தது..
பிராமணர் சொன்னபோது..
நானே..நானா..
என் சமையல் தானா..
அமைஞ்சே போச்சா..
அட..ஆகாசத்தில் நானா..
அதீத சந்தோஷத்தில்..
ஆவலாய் சுவைக்க..
அலற வைத்தது..
அவரையில் உப்பு...
வடையோ..
வடிக்க வடிக்க எண்ணை..
கல்லாய் போனது..
எள்ளு்ருண்டையும்..
அதிரசமோ..
அள்ளும்படி..
திரட்டுப்பாலோ..
ரப்பர் பாலோ....
வாய் திறக்காமல்..
வாழ்த்தி விட்டு போன..
வேதமோதும் வித்தகருக்கு..
வந்தனம் பல சொல்லி..
கோணல்களை நேராக்கி..
குடும்பத்துக்கு பரிமாறி..
பூரித்த வேளை
கும்பிடத் தோன்றியது..
குற்றங்  காணா ..இவர்
நெஞ்சங்கண்டு

Friday, November 4, 2016

Mullandiram koil

Dear all
Two days of trip..thousands of memories.. Treasurable moments..
Divine..serene.. And tranquil...
முள்ளண்டிரம்
மெய் சிலிர்க்கும்..
அனுபவம்..
அடைந்தேன்..
அடையபலம்..
அடைந்தேன்
பேரானந்தம்..
காலகண்டேஸ்வரர்..
காலந் தவறாத பூஜை..
கலக்கம் யாவும்..
கலங்கி ஓடுமிடம்..
அங்கிருந்து பயணம்..
அருகிலுள்ள முள்ளண்டிரம்..
ரேணுகாம்பாள் சன்னதி
மனதுக்கு நிம்மதி
பெருமாளைக் காண...
பேராசைக் கொண்டேன்..
கண்டேன் அங்கே..
கண்கொள்ளா அவன்
காட்சி தரும் கோலம்..
சிதிலமானாலும்..
சிறப்பில் குறைவில்லை..
சற்று தொலைவில்..
சிவன் கோயில்..
நமச்சிவாய நாமம்..
நாலு புறமும் முழங்க..
நாதனைக் காண..
நடந்தேன்..
கல்முள் பாதைவழி..
ஆண்டுகள் பல ஆச்சு
ஆண்டவன் இவனுக்கு
அர்ச்சனை இல்லை
அன்னம் நீர் இல்லை..
இருள் நீங்கும்...
இவன் பேர்பாட..
இல்லை இங்கே..
இவனை கவனிக்க..
அக்கிரஹாரம்..
அங்கிருக்கு..
ஆராதிப்போர்..
யாருமில்லை..
அபயஹஸ்தனும்..
அனாதையாய்..
அவலத்தில் ..
அவன் கோலம் ..
நல்ல காலம்..
முக்கண் இவன்
திறக்குமுன்..
விழித்தோம்..
..நாமும்..
குல தெய்வம்..
குடும்பங்களை..
கூட வைத்தது..
கூட்டுப் ப்ராத்தனை..
கூடி வரும் நன்மை..
கைகோர்ப்போம்...
கரம் குவிப்போம்..
பொன்னும்..பொருளும்..
பொங்கி பெருகட்டும்..
திருத்தலம் உருவாகட்டும்..
தொலையட்டும்..
தொல்லை யாவும்..
அன்புடன்
Akila Ramasami

அம்மா..கதை

how was d trip?..
அசதியாய் நுழைந்த என்னை..
அதி சுறுசுறுப்பாகிய ..கேள்வி..
ஆர்வமாய் ஆரம்பிக்குமுன்..
அறைக்குள் போய்..
அமெரிக்க நேரத்தில்..
அவள் வேலை தொடர்ந்தாள்..
சீமந்த புத்திரியுமே..
அடுத்து வந்த சின்னவள்..
ஹாய் மா..என்றாள்..
அடுத்த நாள் ப்ராஜக்ட்..
அதீத வேலை..
அவசரத்தில்..அவளும்..
அறை நோக்கிச் சென்றாள்..
அசை போட்டேன்..
அந்த நாளை..
யாராவது ஊர் போய் வந்தால்..
'ஆ 'என வாய்பிளந்து..
ஆதி முதல் அந்தம் வரை..
அவர் சொல்லும் கதை கேட்டு..
ஆஹா..என்ன அனுபவம்..
அமையுமோ நமக்குமென்று..
நம்பிக்கையில் வாழ்ந்த நாட்கள்..

வேலை முடித்ததும்...
விசேஷம் என்ன என்றாள்..
மூடில்லை இப்பொதென்று..
முறுக்கிக் கொள்ளாமல்
விவரித்தேன்...
வரிசையாய்..
நாளை ஒன்று வரும்..
அவள் பிள்ளை
ஆசையாய் கேட்குமே
அம்மா ..கதை ..
அப்போது..உதவுமே..
இப்பொ நான் சொல்லுவது..

நல்லாட்சி

குறட்டையோடு..
குட்டித் தூக்கம்..
குளறும் பேச்சு..
குதப்பும் பீடா..

கரை வேட்டி கும்பல்..
கட்சி கூட்டம்..
வேட்டிக் கரை சொல்லும்..
வேஷம் இப்போ எதுவென்று..

மந்திரிகள் சூழ
மப்பிலேயே ராஜாங்கம்..

குளங்கள்..
குப்பை கொட்ட..
சாய்க்கப்படும் மரங்கள்..
ஸ்டீல் பாலம் போட..

பெருந்தலைவர் வீட்டை
பெருக்கித் துடைக்கும்
போலீஸ்காரர்கள்..
தலையாட்டும்..
தீவிர தொண்டர்படை

கோப்புக்கள் ..சூழ
கோப்பையுடன்..
இவர்...
கையெழுத்து...பலர்
தலையெழுத்தாகும்..

 பிரச்சினைகள்..
படமெடுத்தாலும்..
பாதி தூக்கத்தில்..
புரியுமா இவருக்கு.

நீருக்கு.. நீயா நானா..
நீதிக்கு தலைவணங்கா..
நெஞ்சில் ஈரமிலா..
நம் நாட்டு மன்னரிவர்கள்..

நல்லாட்சி ...
நமக்கு..கானல் நீரா..???