Thursday, November 10, 2016

என் சோகக் கதை கேளு தாய்க்குலமே

என் சோகக் கதைய கேளு தாய்க்குலமே..
அத கேட்டாக்க தாங்காதம்மா..
உங்க மனமே..
இட்லி தோசை விட்டு புட்டு
இத்தாலியனா மாறிப்புட்டேன்..
போண்டாவும் பஜ்ஜியும் ி விட்டு..
பிட்ஸாவும் பர்கர் தின்னேன்..
சாம்பாரும் ரசமும் விட்டு..
சப்ஜியும் டாலும் தின்னேன்..
வெண்டையும் சுண்டையும்  விட்டு..
வெங்காயமும் பூண்டும் தின்னேன்..
சட்டினியும் துவையல் விட்டு..
sauce ம் ketchup ம் தின்னேன்..
ready to eat வாங்கி வந்து..
ரெட்டை சரீரம் நானும் ஆனேன்..

மூணு பேர் இருக்கையிலே..
முப்பது வகை சமையல்் செஞ்சேன்..
லேகியமும் மறந்து புட்டு
மசாலாவில் எறங்கி விட்டேன்..

அண்டா குண்டா வித்துபுட்டு.
ஒவனுக்கு மாறி விட்டேன்..
பளபளக்கும் பாத்திரம் விட்டு..
பிளாஸ்டிக்கை நம்பி கெட்டேன்..

பாட்டி வைத்தியம் பழசு என்று..
டாக்டர் ஃபீஸ் அள்ளிக் கொடுத்தேன்..
வேலையும் அதிக மாச்சு..
வேலைக்கு ஆளை வெச்சேன்..
கம்முனு ..குந்தி..கிட்டு..
ஜிம்மு மட்டும் போய் வந்தேன்..

வாழ்க்கை இங்கே வெறுப்பாச்சு..
வழி ஒன்னும் பபுரியலையே..
கலப்பட உலகத்திலே..
நலம் வாழ வழி உளதோ..
(என் சோகக் கதைய கேளு..)

No comments: