#சண்டேஸ்பெஷல்
#வெய்யிலோடு_மல்லுக்கட்டி
வெய்யிலோடு மல்லுக்கட்டியா..
அட..நாம எல்லாம் வெய்யில்ல மஜா செஞ்ச கும்பலாச்சே..😄😄😄😄
டிப்பு..டிப்பு ..டிப்பு..தான்.
என்னடா..டிப்பு டிப்புனு வேர்த்து வழியறதை சொல்றேனானு நினக்கறீங்களா?..😄😄
ஓடி ஓடி உழைக்கணும்..
ஊருக்கெல்லாம் உதவணும்
டிப்பு வாங்கி மகிழணும்..
அன்பை நாளும் வளர்க்கணும்..
பின்ன..சும்மாவா?
வடாம் காய வெச்சுட்டு ..
பார்த்துக்கோனு சொன்னால்..
டிப்பு..ஒரு கப்பு ..வடாம் மாவு..
கல்லை விட்டு மாங்காய் பறிக்கும்
கள்ளரை புடிக்கணும்னா..
கல்லாமணி மாங்காய்..
கையில் வரணும் டிப்பாய்..
வீட்டுக்கார மாமி..
மாமாவுக்கு கொடு என்று கூஜாவில் விட்டு
கொடுப்பாளே காஃபி..
வெட்கமே படாமல்..தூக்கிச் செல்வேனே கூஜா..
வழி யெல்லாம சிந்தாமல்..சிதறாமல் கொண்டு சென்றதற்கு..
கிடைக்குமே டிப்பு..
கப்பில் ஜில் ஜில் நுங்கு ஜூஸு..
சிற்சில காரியம் ..கற்றுக் கொடு என்று....அம்மாவும் போடுவாள் தபால்..என் அன்புள்ள சித்திக்கு..
தோலை உரிப்பேன்.
உ.கிழங்கு ..வறுபடவே..
பாத்திரம் கவுப்பேன்..
துணி மடிப்பேன்..
சொன்னதெல்லாம் செய்வேன்..
கேட்பேனே டிப்பு ..
பிசைந்து போடு என் கையில்
வத்தக்குழம்பு சாதமும்..
ஓட்டையிட்ட நடுகுழுழியில் மாவடு துண்டு ஒண்ணும்..
( வேலைக்கு போகும் அம்மாவுக்கு இதுக்கெல்லாம் டயம் இருக்காதே).
அப்போதெல்லாம் ..
வேலைக்குப் போகும் பெற்றோருக்கு..வீட்டுக்கார அம்மாவோ..பக்கத்து வீட்டம்ம்மாவோ கை கொடுப்பார்..
குழந்தையை நான் பார்த்துக்கறேன்..எங்க வீட்டு பசங்களோட அவளும் இருக்கட்டும்னு...சொல்லும் தங்கமனசு தாராளமாய் இருந்த காலம்.
அதனால்..ஐயோ பாவமேனு
வீட்டுக்காரம்மாவுக்கு விடுதலை கொடுக்க....நம்மள வாரத்தில் ஒரு நாள் சித்தியின் ஆபீஸுக்கு அனுப்பிடுவாங்க..
அகிலா ஆபீஸுக்கு வந்ததுமே..
ஆண்ட்டீஸ்க்கு கொண்டாட்டம்..
"அதோ..அந்த ஃபைலை எடுத்துண்டு வாயேன்..'
" அந்த அங்க்கிள் கிட்ட இந்த பேப்பரை கொடு கண்ணு"..
பார்வதி, கீதா,உஷா, பங்கஜம்னு ஏகப்பட்ட மாமிஸின் அன்புத் தொல்லை..
நமக்கு கிடைக்குமே டிப்பு..
சூப்பர் வெண்ணிலா கோனு..
ஒரே ஒரு வீட்டில் தான் ஃப்ரிட்ஜ் இருக்கும்.அந்த வீட்டுக்கு அடியாளாக இருக்க..ஏகத்துக்கு போட்டி..
கிடைக்குமே டிப்பாய்..ஒரு ஐஸ் க்யூப்..
அப்படியே அதை வாங்கி.. கொஞ்சம் வாய்க்குள் போட்டு,கொஞ்சம் முகத்தில் தேய்ச்சு..
டிப்பானா..டிப்பல்லவோனு..பாட்டு பாட வைக்குமே...
சம்மர் என்றாலே..சுருள வைக்கும் வெய்யிலுனு இப்போ சுருண்டு கிடக்கும்போது..
கொசுவத்தி சுருளை சுத்த விட்ட சூப்பர் தலைப்பு..
டிப்பிலே உழன்று
டிப்பிலே வளர்ந்த ..
பூவையர் குலம் நானே..
சரிதானே..🤦🤦🤦🤦


No comments:
Post a Comment