#Sunday_topic Nov 2022
#பொய்
..
பொய்க்கும் உண்டோ பூட்டு..
இந்த பச்சைக் குழந்தைக்கு எப்போது 'பொய் '..அப்படினு ஒரு விஷயம் இருப்பது தெரிஞ்சது என்றால்...
" காலேஜ் கட் அடிச்சு ..அழகே உன்னை ஆரத்திக்கிறேன்" சினிமா பார்த்த கதையை..என் சித்தி அவ ஃப்ரண்டோட discuss செய்ய..பக்கத்திலிருந்த அணுகுண்டு அகிலா..
பாட்டியிடம் போய் வத்தி வைக்க..
" பொய் இனிமே சொல்லுவியானு ..சித்தி வாங்கின டோஸில்..first first..face to face அறிமுகம் ஆச்சு பொய்க்கு..
ஃபர்ஸ்ட் ராங்க் மட்டுமே வாங்கும் நான்..முதன் முறையாக..
வகுப்பில் மூணாவது ராங்க் வாங்கிட்டு..தாத்தாவிடம் progress report ல் sign வாங்க பயந்து..' தாத்தா ஊரில் இல்லனு' டீச்சரிடம் பொய் சொல்லி..
டீச்சர் தாத்தாவை மார்க்கெட்டில் பார்த்து..
அப்புறமென்ன?..வெள்ளித்திரைக்கு பின் என்ன நடந்திருக்கும்..
ஏன் பொய் சொன்னேன்?..
ஆஃபிஸ் போகும் அம்மா..எனக்கு லீவு நாளில் டப்பாவில் தயிர் சாதம் ,மாவடு வெச்சுட்டு போவார். நமக்கு நாக்கு நமுநமுனு எதாவது கேட்கும். சுவடே தெரியாம . சேமியா உப்புமா பண்ணி சாப்பிட்டுட்டு..வீட்டு வேலைக்கு வரும் பாட்டிக்கிட்ட தயிர் சாதம் கொடுத்திடுவேன்.
அம்மா வந்ததும்..கிச்சன் செக்கிங் நடக்கும்..இது என்ன கடுகு ?..
🍅 ஒண்ணு ஏன் குறையறது?..பச்சை மிளகாய்...???
எனக்கென்ன தெரியும்.. ?..me நைஸா நழுவிங்.
உப்புமா பண்ணி சாப்பிட்டேன் ஏன் உண்மை சொல்லலை..இப்போது தோன்றும்.
இப்படி உட்கார்ந்து.. பொய் சொன்னதெல்லாம்..flash back ல் ஓட....
" ஏம்மா..ragigudda ஆஞ்சநேயர் போய் பார்த்துட்டு வரலாமா?..
வீட்டுக்காரர் கேட்க..
" அப்பா..இன்னிக்கு செம்ம கால் வலி..இங்கே பக்கத்தில இருக்கும் ஆஞ்சுவையே பார்த்துடலாம்"..( எனக்கு இந்த டாபிக்கை எழுதி முடிக்கணுமேனு கவலை..சொன்னேன் ஒரு பொய்). மத்யமர்ல எழுதணும்னு சொன்னால் அவர் என்ன சொல்லப் போறார். But ஒரு குட்டி ஜாலி பொய்.
பாவம்..அவரும் சரி சொல்லியாச்சு. லிஃப்ட் கிட்ட வரும்போது..எதிர்த்த வீட்டு மாமி..கை கொள்ளா கோயில் பிரசாதத்துடன்." இன்னிக்கு ராகிகுட்டா கோயில்ல செம்ம சூப்பர் அலங்காரம்..
பிரசாதம்..டின்னர் ஆச்சு எனக்குனு.."..மாமி
சொன்னதுதான் தாமதம்...நாமளும் அங்கேயே போய்டலாம்னு நான் துள்ள..
வீட்டுக்காரர் வுட்டார் பாருங்க ஒரு லுக்கு..லுக்கு லுக்கு லுக்கு தான்.
பிரசாதம்னு சொன்னதும்..
பொய்..பொய்த்தது.
நமக்கு லொட லொடனு பேசிண்டே போனால் தான் ஆச்சு..அவரும் பாவம் உம் கொட்டிண்டே வர..நான் என் ஃப்ரண்டா இருந்து இப்போ விலகிப் போன ஒருத்தியை பத்தி..ஒப்பித்த படி நடக்க..எதிரே..சாட்சாத் அவளே..
" ஐயோ..பார்த்து எவ்வளவு நாளாச்சு.. நம்ம morning walk எப்படி மிஸ் பண்றேன் தெரியுமானு அவள் சொல்ல.." I miss your yummy pulao"..நான் சொல்ல..( சோறு முக்கியம்)
இப்போ விட்டார் பாருங்க ஒரு லுக்கு....அடிப்பாவி..
அண்டப்புளுகு..
ஆகாசப்புளுகு..
இதெல்லாம் சகஜம்ப்பானு நான் நடக்க..
கடையில் சாமான் வாங்க நிக்கறேன்.. பில் போட்டதும்..
" அப்பா..என் network சரியா இல்ல...நீங்களே..."..நான் இழுக்க..
அடிப்பாவி..லுக்கு..லுக்கு..
லுக்கு..
அடுக்குமா சாமி இந்தப் பொய்..
பின்ன.." என் பணம்..என் பணம்..உன் பணம்..என் பணம்..'..
ஒரு பொய் கணக்கு காட்ட முடியறதா இந்த உலகத்தில..
Golgappa சாப்பிட்டாலும்..google pay சொல்லிக் கொடுத்து மாட்டி விட்டுடறதே..
நான் தான் ஏதோ குட்டிப் பொய் சொல்றேன்னு பார்த்தால்..என்னை சுத்தி கவனித்தால் நிறைய பேர்....same pinch தான்.
இரண்டு இளைஞர்கள்..
கோவிலைச் சுற்றிக் கொண்டிருக்க..
ஒரு இளைஞனுக்கு ஃபோன்.
' yes I am on the way ..'..
உட்கார்ந்து ஜம்முனு வெண்பொங்கல் சூடா சாப்பிட்டுக்கொண்டே பதில்..
பொய்...இங்கே ஒரு relaxation க்கு இருந்திருக்கலாம். Probably he needed a break.
என் முன்னால் நடந்த இரண்டு பெண்மணிகள் பேசறதை .ஒட்டுக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
" ரொம்ப லேட் ஆகிடுத்து..வீட்ல போனால் டோஸ் தான் '..ஒருத்தி சொல்ல.'
" அட..இதுக்குப் போய் டென்ஷனா..பெங்களூரு traffic மேல பழியை போடு..டூப் விடு அவ்வளவுதான்'..
ஆஹா..இன்னிக்கு என்னாச்சு..
பொய் பேசற பார்ட்டீஸா நம்ம கண்ல சிக்கறாங்களேனு'..எனக்கு செம்ம ஜாலி..
ஒரு குட்டிப் பையன்... எல்லாரையும் பயமுறுத்திக் கொண்டு இருந்தான்..அவன் கையில் ஒரு பொய் 🔫 துப்பாக்கி..
தேவுடா..இது என்ன சோதனை..
பொய்யா கூட ..இதை கையில் வெக்காதே கண்ணானு சொல்லிட்டு நடையைக் கட்ட..
அடுத்த ஃப்ரண்ட்..
அஞ்சு நிமிஷம் அரட்டை..
"சரி..see you tomorrow".. அவள் சொல்ல..
நங்குனு யாரோ மண்டையில் கொட்டின feeling.
" வாழ்க்கையில்..இன்று.. என்பது மட்டுமே நிஜம்.
நாளை என்பது விடிந்தால் மட்டும் நிஜம்..இல்லை பொய் தான்.
So live the present.
என்னோட பாலிஸி..
அலைபோல அடுத்தடுத்து நமக்கு ஆப்பு வந்தாலும்..
புன்னகையில் மட்டும் பொய்யைக் கலக்கக்கூடாது..
சரிதானே..???
"


No comments:
Post a Comment