Thursday, October 5, 2023

-அது_மட்டும்_ #நடக்காமலிருந்து இருந்தால்

 #ஸண்டே_டாபிக்

#அது_மட்டும்_  #நடக்காமலிருந்து இருந்தால்


ஓடினேன் ..ஓடினேன்..

சிவாஜி மட்டுமா...

நானுந்தான்..😄😄😄


வூட்டுக்காரர் போகும் ஊரெல்லாம்...நானும் ஓடினேன்..


டேஹ்ராடூன்.

அப்பாடா..ஒரு மாடி வீட்டு மாதுவாகி.. மெதுவா செட்டில் ஆகி..ஒரு வருஷம் ....


மே மாசம் பசங்களுக்கு ஸ்கூல் திறக்க..ஸ்கூல் பஸ், ட்யூஷன்,பால் ,மளிகை எல்லாம் fixed.💪💪


ஜூன் இரண்டாம் வாரம்.

குஜராத்தில் இருந்து வந்த ஹவுஸ் ஓனர்..ஒரு bomb போட்டாங்க..


' இன்னும் 20 நாள்ள வீடு காலி பண்ணு"..

என்ன சொல்லியும் எடுபடலை..

ஊரு இப்போதான் பழக ஆரம்பிச்சிருக்கு..

வீட்டுக்காரரும் 250 கிமீ தள்ளி..மலைப் பிரதேசத்தில்..

எத்தனை எத்தனை மனிதருக்கு

எத்தனை எத்தனை குணமிருக்கு..

பாட்டுதான்..வேறென்ன..😄😄


தேடினேன்..தேடினேன்..இன்னும் ஒரே ஒரு வாரம் தான் பாக்கி..


எங்க காலனி entrance ல்..ஒரு வீடு காலி..

வீட்டைச் சுத்தி பெரிய தோட்டம்.

நடுவுல ஒரு 2 bed room வீடு.


காடா ..செடி ..கொடி ..மரம்...

மழை பெய்ததினால்..சுத்தி ஒரே பாசி..வழுக்கல்..


ஒரு பெரிய லான், நடுவுல ஒரு பெரிய மாமரம்,litchi மரம்.


வீட்டுக்கு பின்னாடி ஒரே புதர்.

காம்பவுண்ட் வால் தாண்டி ஒரு புராதன வீடு..disputed house.


இந்த வீடு வேண்டாம்னு சொல்லிடலாம்னா..வேற ஏரியால தோதா எதுவுமே கெடைக்கல..


சரி..ஆகறது ஆகட்டும்..

டெல்லில இருந்த ஓனர்கிட்ட பேசி..முடிவு பண்ணி...இந்த வீட்டுக்கு குடி வந்தாச்சு..


முதல்ல..பயந்து நடுங்கிண்டு இருந்த வீடு..


கொஞ்ச கொஞ்சமா அந்த வீட்டின் positive vibration உணர ஆரம்பிச்சேன்.


காலைல gate திறக்கும்போதே..

சாலையில் அப்படியே இரண்டு பக்கமும் யூக்லிப்டஸ் மரங்கள் வரவேற்கும்..


Mussoorie..aahaa..கண் கொள்ளாக் காட்சி..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாலம் காட்டும் ஹிமாலயா...


வித விதமா பறவைகள் என் வீட்டை விஸிட் பண்ண ஆரம்பிச்சது..

புதுசா ஏதாவது ஒரு bird வந்தால் ..அதோட சத்தத்தை வெச்சு..ஒரு புது விருந்தாளி இன்னிக்குனு காமெரா எடுத்து ஓடிப் போவேன்.


அணில் ஆட்டம் போடும்..

மரங்கொத்தி ....எட்டிப் பார்க்கும்..

மதில் மேல் பூனையும் வரும்..

மாருதியும் வருவார்..மாங்காய் தின்ன..


முதல் வேலையா ..

தோட்டத்தை சுத்தம் செஞ்சேன்..


எல்லாக் காய்களும் பயிரிட்டு..

அப்படியே பறிச்சு..அப்படியே சமையல்..


மூட்டை மூட்டையாய் மாங்காய்..மூணு மரத்திலேர்ந்து..

மாவடுவும் ,ஆவக்காயும்..அப்படியே மரத்திலேர்ந்து பறிச்சு போட்ட நாட்கள்


Litchi....கொத்து கொத்தாய்..ஒரக்கண்ணில் என்னைப் பார்க்கும்..


வாழை...இலையும் காயும்..


ரோஜா..சாமந்தி..

செம்பருத்தி...

பூக்களேனு...பாடிப் பரவசமடைந்த இடம்..


உயரமா ஒரு ருத்திராக்ஷ மரம்..

நான் அங்கே இருந்த வருடங்களில் , காய்த்தது..

சிவ உபாசகர்கள் என் வீடு வரும்போது கொடுத்து விடுவேன்..


பக்கத்து வீட்டில் ..என்னை காக்கும் பைரவர் போல...ஆர்மியிலிருந்து retired ஆன uncle.

எங்க மூணு பேரையும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட மகான்.


மொட்டை மாடி..மொட்டை மாடி..

அதில் ஓடி ஆடி விளளையாடிய என் பெண்களும்..அவர்கள் நண்பர்களும்..


எல்லார் சாய்ஸும் அப்போது எங்க வீடுதான்..


லான் பக்கத்தில் வெள்ளை நிற ஊஞ்சலொன்று..


அந்த வீட்டுக்கு வந்த யாரும்..அதன் அழகில் சொக்காமல் போனதில்லை...


எல்லாத்துக்கும் மேல..என் பெண்கள் இரண்டு பேரும் படிப்பிலும் ,மற்ற கலைகளிலும்..பெரும் பெயர் பெற வைத்த வீடு..


அந்த ஹவுஸ் ஓனர் காலி பண்ண சொல்லாம இருந்திருந்தால்...?????


இந்த வீட்டை வேண்டாம்னு அன்னிக்கு  சொல்லி இருந்தால்..!???


எத்தனை சந்தோஷத்தை இழந்திருப்பேன்..???


இன்னொரு மாடி வீட்டு கம்பி ஜன்னல் வழியே..

என் குழந்தைகளும் நானும்....

வாழ்க்கையின் முக்கிய பகுதியை..

உப்பு சப்பில்லாமல் முடித்திருப்போமோ என்னவோ..?


இன்னிக்கும் அந்த வீட்டோட நினைவுகளுடன் ..

"அம்மா.. You took a bold decision "..

பசங்க சொல்லும்போது..

அகில்ஸ் very happy ஆகிடுவேன்.

No comments: