Thursday, October 5, 2023

Madhyamar-பட்ட_பிறகே_புத்தி தெளிந்தேன்

 #Sunday_topic

#பட்ட_பிறகே_புத்தி தெளிந்தேன்..


"நாம எல்லாரும் சேர்ந்து ஒண்ணா ..

பெங்களூர்லேர்ந்து டெல்லிக்குப் போகப்போறோம்."


ஆஹா..இப்படி கேட்டதும் எந்த புதுசா கல்யாணம் ஆன பொண்ணுக்கு சந்தோஷம் வராது..


அந்த ஒண்ணா. .

யாருனு ஊகிக்க முடியறதா. ?..

பொண்ணோட அம்மா அப்பாவும் ப்ள்ஸ் மாமியார் ,நாத்தனார் குடும்பம்.


ஆஹா..இவ்வளவு பேரோட தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ஸில் ஜாலியா போகலாமேனு..மனசு சிறகடிக்கும்.


இந்தக் கல்யாணப் பொண்ணு யார்னு மண்டை குடையுதா?..

நானே தான்..😄😄


புது வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்து ..பூகம்பம் கிளம்பும் வரை.


ஆரத்தி எடுத்ததுமே..அடுத்து என்ன செய்யணும்னு புடவையை சொருகிண்டு எங்க அம்மா..சுறுசுறுப்பு திலகம்


நானும் கூட செய்யறேன்..உடம்பு முடியாத நிலையிலும் மாமியார்.


நான் என்ன செய்யட்டும்னு எங்க நாத்தனார்.


நானோ..திருதிருனு முழிச்சிங்..


தஞ்சாவூரும் தாரமங்கலமும் அங்கே....


புளிக்கொழம்புக்கு வெல்லம் போட்டாதான் நன்னா இருக்கும்..


" அச்சோ வெல்லமா..???


  pure coffee..???

 சிக்கரி மிக்ஸ் டேஸ்ட்டே தனி..🫣

 

  

உப்புமாவுக்கு சக்கரை தயிரா..?

கொத்ஸு ......???🤔


இது ஒரு சாம்ப்பிள் தான்.


சண்டை எல்லாம் எதுவுமே இல்லை..

அவங்க அவங்க வழிமுறையை sharing ..

நமக்கோ ..shivering..😄


எதாவது பிரச்சனை வந்துடக்க்கூடாதேனு ..நான் சொதப்பல் வேற..

Maturity யே இல்லாம...இப்போ நினைச்சால் கூட ..🫣


யப்பா சாமி....இனிமே நீங்க ரெண்டு பேரும் வேற வேற time slot ல தான் வரணும்னு முடிவு பண்ணினேன்..


அன்புதான் basis என்றாலும்..அந்த சில நாட்கள் ..


பட்ட பிறகே புத்தி  தெளிந்தேன்..


சம்பந்தி ரெண்டு பேரும் அப்புறம் ஜிகிரி தோஸ்த்தானது வேற விஷயம்.

' உங்க அம்மாவைக் கூப்பிட்டுண்டு வந்து பார்த்துக்கோ"..


என் அருமை மாமியார் கடைசி வார்த்தைகள்..


உஷார் ஆனப்பறம்...ஒன்று புரிந்தது..


ரெண்டு ..different views and life style இருக்கும் உறவோ ..நட்போ..ஒரே சமயத்தில் கூப்பிடறதை விட்டே விட்டேன்.💪💪


ஒரு சமயம்.. என் சித்தி சித்தப்பாவும் டெல்லி வரதுக்கு டிக்க்ட் புக் பண்ணினார்கள்.


அதே சமயம் ..என் friend  family வருவதாக இருந்தார்கள்.


இரண்டு பேரின் wave length வேறு வேறு..


ஒரே சமயத்தில் பணிக்கர் ட்ராவல்ஸ்லில் உட்கார்த்தி வெச்சுடலாம்..


ஆனால்..மை.வாய்ஸ்..

மாட்டிக்காதேனு அலர்ட் செய்ய..

உண்மையா ரெண்டு பேர்க்கிட்டயும் கேட்டேன்.


இவங்க வந்தால் உங்களுக்கு ஓகேயானு..


அதில் ஒருத்தர் ப்ளாநை மாற்ற..

ரெண்டு பேரோடும் ஜாலியா spent time.


அப்படித்தான்.. 

எங்கம்மா இறந்தபோது..இரண்டாம் நாள்.


சித்திகள்...அத்தைகள்..


சேர்ந்து பேசுவா..எல்லாம் செய்வா..


திடீர்னு எதோ ஒரு மனத்தாங்கல் வருவதை முதல் பார்த்தேன்.

' நீ அவங்களைத் தான் கவனிக்க்றேனு சித்திகளும்"..


" நீ ரொம்ப லக்கி..உங்க சித்திகள் எல்லாம் சூப்பரா செய்யறா".

அத்தைகள்..


இந்தக் காலத்தில் எல்லாருக்குமே கட்டில் மெத்தை இல்லாமயும் இருக்க முடியறதில்ல..

அடுத்து ஒரே ஒரு western toilet தான்.


அகிலா...மாட்டிக்கினேனு..

மனசு மணி அடிக்க..😄😄


10 th to 13 th ..

ரெண்டு மக்களும் சேர்வாங்க..


சோர்ந்தால் அவங்க அவங்க ரூமில் சுகமா இருக்க ..வழி செய்தேன்..


வந்தவர்களை ..

வாஞ்சையாய் கவனித்தேன்.

எல்லாரும் happy.


 சுமுகமா சில உறவுகளையும் நட்புகளையும்  வளர்க்கவும் பாதுக்காக்கவும் ..ஒரு space கண்டிப்பா வேணும் என்ற பாடம் கிடைத்ததால்..

 இப்போ என் வீட்டுக்கு நான் ..நீனு போட்டி போட்டு எல்லாரும் வந்துட்டு போறாங்க..

எப்புடி ..புத்தி தெளிந்த கதை

No comments: