Friday, October 6, 2023

Madhyamar-நலம் நலமறிய ஆவல்

 #ஸண்டே_ஸ்பெஷல்


#நலம்_நலமறிய_ஆவல்


Dear Mythili Varadarajan  aunty


எப்படி இருக்கீங்க ? என்னடா இது ஒரே ஊர்ல இருந்து கொண்டு, நேரே வந்து பேசாமல், கடுதாசி போடறேனேனு நினைக்கிறீங்களா?😄😄


என்ன செய்யறது ..நம்ம பெங்களூரூ traffic அப்படி..😭


முதல்ல பிடிங்க என் வாழ்த்துக்களை..💐💐💐


உங்க மகள் சுஷ்மிதா ..CEO Sushmita ஆகியாச்சுனு நியூஸ் பார்த்தப்போ..ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு aunty.💐💐💐💐💐


என் குடும்பத்தில இருக்கும் எல்லார்க்கிட்டயும் ,என்னோட friend mythili aunty பொண்ணுனு இந்த சூப்பர் சேதியை ஷேர் பண்ணினேன்.


. இன்னிக்கு ஒரே குஷி மூடில் இருக்கேனு ,ஸ்வீட்ஸ் ஜாஸ்தி சாப்பிட்டுடாதீங்க..

just kidding aunty. Enjoy this precious moment.🧁🎂🍕🍨🍧


கொஞ்சம் ,கொசுவர்த்தி சுத்தி பார்க்கிறேன். எப்படி நீங்களும் நானும் ஃப்ரண்ட் ஆனோம்னு. மத்யமருக்கு முன்பே நாம் முகநூலில் நட்பாகி விட்டாலும், நம் அன்பை இன்னும் பலப்படுத்தியது மத்யமர் தான்.


"எப்போ வீட்டுக்கு வர?'..ஒரு அன்பு கலந்த் அதிகாரத் தோரணையில் ,எங்கம்மாவுக்கு அப்புறம் உரிமையோட எப்போதும் அழைப்பவர் நீங்கள்.

ஆனாலும் ..எதோ காரணங்கள், வேலைகள் ..என்னால் ஓடி வர முடியறதில்ல..


உங்க பதிவெல்லாம் படிக்கும் போது..ஒரு பெரிய inspiration கிடைக்கும்.

நீங்க சந்தித்த  challenges ..and struggles .. அதையெல்லாம் தாண்டி ..உங்கள் மனோதிடம்..my salutes to you aunty.


உங்க உடல் உபாதைகளையும் மீறி...ஆர்வத்துடன் எல்லா தலைப்புகளுக்கும் தகுந்த மாதிரி ..உங்க அனுபவங்களை ஷேர் பண்றது..நேரம் கிடைக்கும்போது ..உங்க மனசுக்கு பிடிச்ச பாட்டு பாடறது..

அழகா ஃபோட்டோ எடுக்கறது...

Really admirable aunty


திருப்பி திருப்பி என் சொந்தக் கதை எழுதி போரடிக்கிறேனானு..

கேட்பீங்க..

அப்படியெல்லாம் கேட்காதீங்க..எழுதுங்க..

அப்போதான் ,சின்ன விஷயத்துக்கெல்லாம் துவண்டு போற என்னை மாதிரி மனசுக்கு, ஒரு தைரியமும் ,நம்பிக்கையும் வரும்.


எப்பவும் போல..நுணுக்கி நுணுக்கி எல்லா இடத்தை எழுதி ரொப்பிட்டேன்.


Convey my hearty congratulations to your daughter.


ஒரு CEO வின் அம்மா..எனக்கு ஃப்ரண்ட் என்பதில் எனக்கு ரொம்ப பெருமை.😄


என்ன ஒரு அற்புத பயணம் உங்க வாழ்க்கை !!!.

எவ்வளவு உசந்த இடத்தில் ,உயர் பதவியில் உங்க மகள். அதே சமயம் உங்க தேவைகள் அனைத்தும் அன்பாய் கவனித்து 

உங்களை பார்த்துக் கொள்ளும் பாங்கும்..அருமை .


ஒரு proud mother க்கு என் அன்பான வாழ்த்து மடல்.


Take care of your health aunty. விரைவில் உங்களை அடுத்த பெங்களூர் மீட் ஒண்ணு போட்டு சந்திச்சிடுவோம். சூப்பரா சாப்பிடவும் செய்வோம்.


என்றும் அன்புடன்

அகிலா

No comments: