#சித்திரம்_பேசுதடி
பேசும் படத்தை பகிர்ந்த srividhya thuhiliக்கு நன்றி
#என்_அம்மா..
இவள் நடும்..
ஒவ்வொரு நாற்றும்..
நான்..
நிமிர்ந்து நிற்கத்தானே..
நாளும் மாறும்..
நானும் வளர்வேன்..உன்
குனிந்த தலை நிமிரும்..உன்
கவலையெல்லாம் பறக்கும்..
அதுவரை..
உன் முதுகில்..
சுகமான சுமையாய் நானிருப்பேன்..
உன்னோடு ..கட்டுண்டு இருந்தாலும்..
களிப்புடன் ரசிப்பேனே..
கண்பறிக்கும் காட்சிகளை
No comments:
Post a Comment