Friday, October 6, 2023

Madhyamar- வாழ்தல் இனிது

 #ஸண்டே_டாபிக்

#வாழ்தல்_இனிது..


இது என்ன பிறப்புடா சாமி..இப்படி நொந்து போன சமயங்கள் நிறைய உண்டு..

அது எப்படி ..நம்மளுக்கும் மட்டும் வெச்சு செய்யறாரு இந்தக் கடவுள்னு ...கோபம் கூட வரும் .


இறந்தகாலத்தை அசை போட்டு.

எதிர்காலத்துக்கு ஆசை வைத்து

இசையாய் இனிக்க வேண்டிய நிகழ்காலம் கை நழுவிப் போகும் அவலத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவது..

' வாழ்தல் இனிது..அதுவும் 

இன்று வாழ்தல் இனிது' என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு காலையும் வரவேற்க..

அதுக்கே..maturity வருவதுக்கு பல காலம் ஆகிறது.இப்போ


Life is precious.

அதுக்காக..லாக்கர்ல பூட்டி வைக்க முடியுமா..

அடுத்த சந்ததி அனுபவிக்கட்டுமேனு ..வைக்க முடியுமா என்ன??


அனுபவி ராஜா / ராணி அனுபவி..


ஒரு நொடி வாழ்க்கை extra கிடைச்சாலே போனஸ் தான்.

போனஸ் கிடைச்சா எப்படி செலவு பண்ண plan பண்றோமோ..அதே போலத் தான்..

நம்ம வாழ்க்கை என்ற போனஸை..purposeful ஆ ஆக்க முயற்சிக்கணுமா இல்லையா?


ஆனால்..இந்த attitude

சாமான்யத்தில் வருமா என்ன?


நம்ம மிரளவைக்கும் சம்பவங்கள்..யப்பா சாமி..நான் இன்னிக்கே உசுரோட இருக்கேனே அதே பெரிய விஷயமடானு ஒரு feel வரும் தருணம்..


நம்மை புரட்டிப் போடும் இழப்புகள்..

"இன்னும் கொஞ்சம் லைஃபை enjoy பண்ணி இருக்கலாமேனு'..

தோண வைக்கும் தருணங்கள்..


மகிழ்ச்சியைத் தேடி " மைல்' கணக்கா போகாமல்..

அது என் அருகா"மையில்" தான் இருக்கு..

இந்தக் குட்டியூண்டு நெஞ்சுக் கூட்டுக்குள்ளத்தான் இருக்குனு புரியும்போது..வாழ்தல் ..மிக இனிதாகத் தோன்றும்.


எத்தனை prepare பண்ணாலும்..அடுத்த கணம்..நம்ம வாழ்க்கை என்ன கேள்வியுடன் முன்னாடி வந்து நிற்க்கபோகிறது என்று யாருக்குமே தெரியாது..


அதனால்..take life as it comes நு என் குரு சொல்வதை அடிக்கடி நினைக்கும் போது வாழ்தலே இனிது என்று நினைக்கத் தோன்றும்.


வாழ்தல் இனிது...

எப்போதெல்லாம்..


வகையா ருசியா சமைச்சு சாப்பிட்டு/ பரிமாறும் போது..( சோறு முக்கியம்ப்பா)


வானத்தைப் பார்த்து ..வாய் பிளக்கும் போது

விண்மீனை எண்ணும் போது.

விகல்பமில்லா ...செய்கையின் போது...


வீழ்ந்தாலும் மண்ணைத் தட்டிவிட்டு..எழுந்து ஓடும்போது.


வெற்றிக் கொடிகள் வாரிசுகள் நாட்டும் பொழுது..


வேண்டாத சிந்தனைகளை ..விரட்டும்போது.


வையகம்..இது எனக்கே எனக்கானு..அவனைக் கேட்கும்போது..


Worthy ஆ நம்ம வாழ்க்கையை மாற்றும் போது..


ஆனா..இந்த ஜென் நிலைக்கு வந்து..வாழ்தல் இனிதுனு சொல்ல ஆரம்பிக்கும்போது...

நரை திரை மூப்பு முடிய ஆரம்பிச்சு..சாக்காடு போகுமுன்..சட்டென ஒரு ஒளிவட்டம் ..ஒரு ஞானோதயம் வரும்னு நினைக்கறேன்..


Hello..its not too late நு..என்னைப் பார்த்து சிரிக்கும்னு நினைக்கறேன்.


"'தில்லும் வேணும்'....

தில் ( dil) ம் வேணும்..

இது ரெண்டும் இருந்தால்..

வாழ்'தல்'..இனிதோ இனிது.


சரிதானே

No comments: