Thursday, October 5, 2023

Madhyamar-சித்திரம் பேசுதடி

 #சித்திரம்_பேசுதடி..


சித்திரம் பேசுமா என்ன?

விசித்திரமா இருக்கே!!!


வரிசைப் பற்களின்..

வசீகரப் புன்னகையில்..

கண்டேன்..

சித்திரம் பேசியதை..


விழியின் அசைவில்..

வா என்ற விளிப்பில்..

கண்டேன்...

சித்திரம் பேசியதை..


வில்லென்றெ புருவமும்..

வீழ்த்தும் அவ்வழகில்..

கண்டேன்..

சித்திரம் பேசியதை..


விரலசைத்த பாங்கில்

வேணுகான இசையில்

கண்டேன்..

சித்திரம் பேசியதை...


வளையல்கள் உரசியபடி

வரவேற்பு தந்ததிலே..

கண்டேன்..

சித்திரம் பேசியதை..


விரித்த குடை ஜிமிக்கி

வீசி ஆடும் ஊஞ்சலிலே

கண்டேன்..

சித்திரம் பேசியதை..


வைர மூக்குத்தியுமே..

வர்ண ஜாலம் காட்டியதில்..

கண்டேன்..

சித்திரம் பேசியதை..


வண்ணப் பட்டாடையில்

வஞ்சி அவள் அபினயத்தில்

கண்டேன்..

சித்திரம் பேசியதை..


வாசமிகு மல்லிப்பூவும்

வளைந்து செருகிய அழகில்..

கண்டேன்..

சித்திரம் பேசியதை..


வண்ணக் கலவையிலே..

வந்து மலர்ந்த பெண்ணிவளோ?


சுயம்புவின் ஓவியத்தில்

உயிர் பெற்ற தாரகையோ?


சித்திரமும் பேசுமே..

கவிதையாய்..கதையாய்..


இத்திறம் எங்கு கண்டோம்?

மத்யமரில் மட்டுந்தானே!!


ஓவியம்: சுயம்பு அவர்கள்

No comments: