#ஸண்டே_ஸ்பெஷல்
#நல்லதே_நடந்தது....
வடக்கில் நான் வாழ்ந்து கொண்டிருக்க..
விடுமுறை எப்போ வரும்..வீடு எப்போ சந்தோஷத்தில் நிறையும்..?
எல்லா பாட்டி தாத்தாக்கள் போலத் தான் என் பெற்றோரும் ..காத்துக் கொண்டிருப்பார்கள்.
மற்றபடி .ஃபோன் 📞 📞..
ஒரு நாளைக்கு ஒரு மூணு முறையாவது அம்மா 📞 வரும்.
சாப்பிட்டியா..குழந்தகள் ஸ்கூல்லேர்ந்து வந்தாச்சா..இங்கே வெயில் அங்கே குளிரா..மழையா....
கல்யாணத்துக்கு எதுக்காவது போய்ட்டு வந்தால்..அங்கே எல்லாரும் கட்டிக் கொண்டு வந்த புடவை,நகை , menu எல்லாம் எனக்கு சொல்லும் அம்மா.
இப்படி இருக்கையில்..
" அம்மா..நீ பேசறது புரியல.. 📞 ஒழுங்கா வெச்சு பேசும்மா.."
நான் சொல்வேன்..
' இல்லையே..லைன் சரியா இருக்கே'..
இப்படியே..தொடரும்..
"சித்தி ஏதோ குழறி குழறிப் பேசறா..ஒண்ணும் புரியலை..என்னனு கொஞ்சம் பாரு' ஒரு கல்யாணத்தில் என் அம்மாவைப் பார்த்த பெரியம்மா பெண் ஃபோன் பண்ண..எனக்கு பயம் பிடித்தது..
உடனே கிளம்பி வந்து எல்லா டெஸ்ட்டும் எடுத்து....மருந்து மாத்திரைகள் ஆரம்பித்து..நானும் குழந்தைகள் நிமித்தம் ஊருக்கு வந்தாச்சு.
எது வேணும் என்றாலும் எங்க கிட்ட சொல்லுங்கோ...அகிலா ..பாவம் எங்கேர்ந்து வருவா?..
பொடி வைத்து பேசிய சில உறவுகள்..
"கடைசி காலத்தில் ..நாம் தனியாவே இருந்துடுவோமோ..'..
எந்த அம்மாவுக்கும் வரக்கூடிய ஆதங்கம்.
இது இப்படி இருக்க..அன்பே உருவான மாமியார்.
நான் ஊருக்கு கிளம்பும்போதெல்லாம் கண்கலங்கும்...மாமியார்.( என் நாத்தனார் தான் அவங்களைப் பார்த்துக் கொண்டாள். நாங்க இருந்த ஊர்கள், காடு,மலை,சீதோஷண நிலை..காரணம்)
.
2013..என் வீட்டுக்காரருக்கு குஜராத்தில் ஒரு குக் கிராமம் போஸ்டிங் போட..
.ஏன் எப்படி எதுக்கு..ஏதாவது யோசிச்சு தான் செய்யறியா..?
இத்தனை கேள்விக்கணைக்கும் நடுவில் பெங்களூர் வந்து விட்டேன்.
அம்மா அப்பா..சென்னையிலிருந்து வருவார்கள். அப்பாடா..weather super. Enjoy பண்ணுவாங்க..
மாமியார்..
கூட வந்து இருப்பார்கள்..
ஒரு எட்டு மாசம்..எல்லா பண்டிகையும் மாமியாருடன் கொண்டாடினோம்.
சந்தோஷ நாட்கள்.
20 வருஷ விட்டுப் போன வாழ்க்கை..அந்த சில மாதங்களில் ..மாமியாருடன் வாழ்ந்தேன்..
திருப்தி பட்டு விட்டாளோ என்னமோ..?
' என் மாட்டுப் பொண்ணு..' பெருமை கொப்பளிக்கும் முகம்..கடைசி மூச்சை விட்டது..
நல்லது நடந்தது....அவளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்தேன்..
ஆச்சு..அம்மாவின் உடல் நிலை மோசமாக..
பெங்களூர் கூட்டி வந்து விட்டேன்..
நரம்பு நோயின் தாக்கம் அதிகமானாலும்..
என் கூடக் கூட உட்கார்ந்தபடியே எல்லாம் செய்து தருவாள்..
பேச்சே நின்று போய்..நோட் புக் நோட் புக்காய் எழுதிக் காட்டுவாள்..
பிடித்த காஃபி இறங்குவதற்குள்..பெரும் போராட்டம்..
அரைத்துக் கொடுத்த பாதாமும் முந்திரியும் எங்கே போகும்னு தெரியாது..
அடுத்து வெஜிடபிள் போல ஆகலாம். ட்யூபில் உணவு தரலாம்..
டாக்டர் சொன்னபோது ..வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன்..
கடைசி மூச்சு வரைக்கும் ..அம்மா..நடமாடணும்..'..
கேட்டார் கடவுள்..
இதுக்கு மேலே உனக்கு கஷ்டம் வேண்டாம்னு கூட்டிச் சென்றார்..
நல்லதே நடந்தது.
இந்த இரண்டு ஜீவன்களும் எனக்காகவே காத்திருந்தனரோ..?
" அவ எங்க வரப்போறா?..
வந்தேன்..வாழ்ந்தேன் அவர்களுடன் சில மாதங்கள் அவர்கள் ஆசைப்படி..
என்னைப் பொறுத்தவரை..
நல்லதே நடந்தது..
ஃபோட்டோவில் இருந்தாலும்..
போடுவேன் இன்னிக்கும் சண்டை அவர்களுடன்..
ரெண்டு பேருமே என்னைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றும்.
பிரிவிலும் ..சில நல்லது நடந்தே தீரும்.

No comments:
Post a Comment