Thursday, October 5, 2023

Madhyamar-கனவை மிஞ்சிய நிஜம்

 #Sunday_topic

கனவை மிஞ்சிய நிஜம்.


சின்ன வயசிலேர்ந்தே..

தொண்டையில கீச் கீச்..தான்.

பள்ளியெழுச்சி முடிந்து ..

பள்ளிக் கூடம் போகும் வரை..வாயில காத்து தான் வருதுனு ..குரலே வராது..அப்படியே வெளியே வரும் குரலும்..பிசிறு தட்டும்.

சங்கீதக் குடும்பத்தில் பிறந்த அகிலாவுக்கு வந்த சோதனை..சோதனை..

அத்தைகள் ,அப்பா எல்லாரும் சங்கீதமே சுவாசமா இருக்க..

ஸ ரி க ம ப...கூட அபஸ்வரமா வரும் நான் எங்கே..?


பாடுபவர்களைக் கண்டால் ஆசையா இருக்கும்.

கனவில மட்டும் கச்சேரி பண்ணுவேன்..


ஒருவழியா ..தொண்டை ஆபரேஷன் செய்து..' மடை திறந்து பாடும் நதி அலை நான்..மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்னு" ...அந்த சின்ன கனவும்...பத்தாம் க்ளாஸ்னு வந்ததும்..பட்டுனு உடைஞ்சது.


டான்ஸ்..ஆடுபவர்களைக் கண்டால் ஆசையா இருக்கும். ஆனால் , அதுவும் சரிப்படலை.. ஸ்கூல்ல கூட..." ஆகாயப் பந்தலிலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா " பாட்டுக்கு....தப்பித் தவறி ..ஒரு டான்ஸ் ஸ்டெப் வராமல்..கல்யாணப் பொண்ணா உட்கார்த்தி வெச்சுட்டாங்க ..எங்க மிஸ்.

So..ஆடல் கலை..அகிலாவுக்கு இல்லனு ...கனவுல கூட டான்ஸ் ஆடினதில்ல..


என் கனவை நிஜமாக்க என் சின்னப் பெண்.

பாட்டு ,டான்ஸ் எல்லாம் தூள் கிளப்புவா..ஓடி ஓடி அவளோடு ,அவள் கலையார்வத்துக்கு கை கொடுத்தேன்..


இப்படி வாழ்க்கை ஓடம் செல்ல...நாப்பது வயசுக்கப்பறம் ஞானோதயம் ஒண்ணு பிறந்தது.

.

நமக்கு ஒரு கலை வராட்டா என்ன...அதை ரசிக்கவாவது கத்துக்கணும்னு....

ஒரு சின்ன தேடல் ஆரம்பிச்சேன்.


2009...டெஹ்ராடூன் நியூஸ் பேப்பரில்..ஒரு சின்ன விளம்பரம்.


SPICMACAY..The Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth...is looking for volunteers என்று.


அவங்க கொடுத்த அட்ரஸில்..

சனிக்கிழமை சாயந்திரம்..

ஒரு பத்து பேர் அமர்ந்திருந்த   ஒரு சின்ன அறைக்குள் நுழைந்தேன். இசை, நாடகம்,ஆடல் பாடல், பல தரப்பட்ட இந்தியக் கலைகளைப் பற்றிய எல்லாரும் பேசிக் கொண்டிருக்க..திரு..திருனு ..

முழித்துக் கொண்டு ..

நமக்கு என்ன தெரியும் என்று ..நிராசையில் வெளியே வந்தேன். 

இரண்டு ,மூன்று  வாரம் அவர்களிடமிருந்து  மெசேஜ் வந்தபோதும் , பயத்தில் போகவில்லை..


ஒரு நாள்..திடீரென்று ஒரு SMS.

உன்னிடம் அன்றைய மீட்டிங்..where  Founder Kiren Seth ji attended that.ஃபோட்டோ எதாவது இருக்கா..? 

தேடினேன்..கிடைத்தது....


என் குட்டி மொபைலில் அவர் எல்லாருடனும் உரையாடுவது இருக்க...நான் அதை எங்கள் லோகல் president க்கு அனுப்ப..

"ஆஹா..நன்றி சொல்லவே எனக்கு வார்த்தையில்லையேனு" 

அவங்க reply.


அப்புறம் என்ன ..அகிலா..அங்கே செல்லக் குட்டி ஆகிட்டேன்.


இந்திய இசையும், கிராமியக் கலைகளும் ,கலைஞர்களும்..

பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்களும்..


அவர்கள் ப்ரோக்ராம் schedule வந்ததுமே..யார் யார் எந்தெந்த கல்விக்கூடங்கள் ,

அந்தக் கலைஞர்களுடன் செல்வோம்..அவர்களுக்கு வேண்டிய உணவு கொண்டு போகணும்னு ...ரெடியாகும்.


பொற்காலம் அது..

முதல் முதலில் 14 கிமீ ஸ்கூட்டியில்  ஒரு அரசுப் பள்ளிக்குள் 

SPICMACAY volunteer என்று நுழைந்தேன். மேடை அலங்காரம்,மைக் டெஸ்ட்டிங்.. compere செய்யும் குழந்தைக்கு ..சொல்லிக் கொடுக்க..

திரை விலக..

தேவதை போல 

கமலா சங்கர் மேடம்..

அவர்கள். கையில் ..

அவர்களே உருவாக்கிய Shankar slide guitar. இசைப் ப்ரவாகம்.

எதோ ஒரு புது உலகுக்குள் நுழைந்த அனுபவம்.


அதற்குப்பின் .. No looking back. 

குழந்தைகள் 7 மணிக்கு ஸ்கூல் கிளம்பியதும் நானும் ஜூட் விடுவேன்.

எத்தனை  பள்ளிகள்,  கல்லூரிகள். 

சந்து பொந்தில் இருக்கும் ஸ்கூலெல்லாம் அத்துப்படி.அங்கே இசைக் கலைஞர்களை வரவேற்று..

குழந்தைகளோடு குழந்தையாய் முதல் வரிசையில் உட்கார்ந்து , ஃபோட்டோ எடுத்து.. வீடியோ எடுத்து...

'இனிமேல் நீதான் நம்ம Facebook page ..ல் events post பண்ணனும்..".

அடுத்து லோகல் நியூஸ் பேப்பருக்கு சுடச் சுட ஃபோட்டோவுடன் ,article எழுதணும்.


ஒவ்வொரு கலை,கலைஞர்கள் பற்றி படிக்க ஆரம்பித்தேன். 

அடுத்த நாள் காலை , எல்லா செய்தித் தாளிலும் என் கட்டுரை இடம் பெறும்.

கட்டுரைகளுக்கு கீழ்..by Akila Ramasami என்று பார்க்கும்போது..

இது கனவா..நிஜமானு கிள்ளிப் பார்ப்பேன்.


Briju maharaj ஜி.. அவருக்கு பணிவிடை செய்யும் பாக்கியம்.

பேசும்போதே..கண்ணும் விரலும் நடனமாடும். Very very humble and affectionate. இன்னிக்கு அவர் இல்லனு ..படிச்சப்போ..

என்ன தவம் செய்தனைனு கண்ணுல ஜலம்.


Geetha chandran mam..யப்பா ..அவங்க பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அழகு இருக்கே..என் காமெராவின் மெமரி ரொம்பி வழிந்தது.


Puppetry, bamboo craft, madhubani painting, pattachitra, paper mache,block printing...

இப்படி workshop நடக்கும் ஸ்கூலில் ..வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.


வயலின்,சித்தார்,வீணை, பலவகையான கிராமியக் கலைகள்..பெரிய கலைஞர்கள் முதல் ..வளர்ந்து வருபவர் வரை..அவர்கள் அமைதி,அன்பு, போராட்டம் ..அப்பப்பா..எத்தனை படிப்பினைகள்.


Ajay sharma sir உடன் Heritage walk செல்லும்போது 

.ஒவ்வொரு கல்லும் சொல்லும் கதைகள் அவர் சொல்லும்போது..students உடன் students ஆக ..ரசிப்பேன்.


The popular dancing couple of India..Dhananjayan sir and Shantha mam.. அவர்கள் பெங்களூர் circuit.

திடீரென்று சாயங்காலம் 6 மணிக்கு ஃபோன்.

' சீக்கிரமா சுடச் சுட ஒரு டிஃபன் செய்து . ஹோட்டலில் தங்கி  இருக்கும் அவர்களுக்கு கொண்டு போய் கொடு'..

பரபரனு..கொதிக்க கொதிக்க பொங்கல் சட்னி எடுத்து செல்ல...

" அகிலா...புளி தூக்கலா ஒரு கொத்சு பண்ணிண்டு வந்திருக்கலாமேனு' தனஞ்செயன் சார் உரிமையா சொன்னபோது.." டைம் இல்லனு ..அசடு வழிஞ்சதை மறக்க முடியாது..

"அப்பளம் இட்டுப் பாருனு" பாட்டு பாடும் அபிஷேக் ரகுராம்..என் வீட்டில் வந்து ரசம் சாதம் சாப்பிட்டது ...இன்றும் மனசில் ..


அவர்கள் எல்லாரும் செவிக்கும் கண்ணுக்கும் விருந்து கொடுக்க..

பல கலைஞர்களுக்கு என் சமையலை..அவர்கள் வயிற்றுக்கு உணவிட்ட பாக்கியம் எனக்கு கிடைத்தது..


சத்தியமா .. இவங்க போன்றவர்களை காண்பேன்..பேசுவேன்..

பழகுவேன்...என் எழுத்து பிரசுரமாகும்னு ...கனவுல கூட நினைச்சது இல்ல..


ஆனால்..கனவை மிஞ்சிய நிஜம்.

இன்றும் நினைக்கும் போது..

ஏதோ ஒரு மிகப் பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.


No comments: