#ஸண்டே_ஸ்பெஷல்
#மறதி_வரமா_சாபமா?
"என்னை மறந்தேன்..எதற்கு மறந்தேன்..?"😃😃😃😄
இதெல்லாம் ஹீரோயின் பாடினால் ஹிட்டோ ஹிட்டு...நாம பாடினால்..நமக்கு கிடைக்கும் குட்டோ குட்டு..😂😂
மாணவனுக்கு இருக்கும் மறதி
மார்க்கும் ஆகுமே கம்மி..😭
கட்டிளங்காளையின் மறதி
கண்ணை ஏமாற்றும் உறுதி😄
கன்னிப் பெண்ணின் மறதி
கரித்துக் கொட்டப்படும் உறுதி
கட்டிய கணவனின் மறதி...டின்னு
கட்டி உதை வாங்குவது உறுதி🤐
கண்ணான மனைவியின் மறதி
குழம்பில் உப்பு குறைவது உறுதி☕
கடன் கொடுத்தவரின் மறதி..
திரும்பி வராக் கடன் உறுதி..🤑
கடன் வாங்கியவரின் மறதி..
கெட்டும் போகும் பேரும் உறுதி..
கடவுச் சொல்லில் மறதி
கதவு தட்டினாலும் திறக்காது உறுதி.
கையில் வைத்து தேடும் மறதி
கால விரயம் என்பது உறுதி..
அத்தைப் பாட்டியின் மறதி..
ஆரஞ்சு மிட்டாய் கிட்டாதென்பது உறுதி..
பாட்டி தாத்தாவின் மறதி..
பழைய கதை கிடைக்காதென்பது உறுதி..
கூடப் பிறந்தவன் மறதி..
கூடை நிறைய சீர் கிடைக்காதென்பது உறுதி..
அடிக்கடி பார்ப்போரை யாரென்று கேட்கும் மறதி..
அடி கிடைக்குமென்பது உறுதி..
பக்கத்து வீட்டு மாமியின் மறதி..
போன சம்படம் திரும்பி வராதென்பது உறுதி..
வலது கரத்தின் மறதி..அவள்
விளக்கினதை மீண்டும் விளக்குவது உறுதி..
வண்டி ஓட்டுபவரின் மறதி.
ஊரை சுற்றிப் பார்ப்பது உறுதி..
பஸ் கண்டக்டரின் மறதி..மீதி
சில்லறை கிடைக்காதென்பது உறுதி..
கெடுதல் செய்தோரை நினைக்கா மறதி
களிப்பில் வாழ்வை மெருகூட்டுவது உறுதி
பதிவு போடுபவரின் மறதி..தன்
பதிவுக்கே லைக்கும் கமெண்ட்டுவது உறுதி..
பதிவை படிப்பவரின் மறதி
பாதியிலே வேறு பதிவு தாவுவது உறுதி..
வாலிபமோ..வயோதிகமோ..
வாழ்வில் வரக்கூடாது மறதி..
கருவறை முதல் காடு வரை ..
கற்றதையும் பெற்றதையும்..
கண்டதையும் கேட்டதையும்..
கருத்திலே கொள்ள எடுப்போமே ..உறுதி..
கடைசி வரை நம்மை அண்டாதிருக்குமே ..மறதி..
ஒரு நாளும்.. உனை மறவாத.. பிரியாத வரம் வேண்டும்..
இது...நம்ம மத்யமர் பாட்டு இதுதானே..?
இப்போ சொல்லுங்க....மறதி வரமா? ..சாபமா..?..
சாபமே..சாபமே தானே😄😄😄😄😄

No comments:
Post a Comment