Thursday, October 5, 2023

Madhyamar-சந்தேகம்

 #Sunday_topic

#சந்தேகம்


Daddy எனக்கொரு doubttu..

இந்த doubt ..இந்த சந்தேகம் இருக்கே..


சந்தேகம் நமக்கு வரும் கோடி.

ஆனா..நிறைய சந்தேகத்தை கிளப்பிவிடற கேடியுமா இருந்திருக்கேன்..இப்பவும் இருக்கேன்..😄😄♥️


சின்னப் பொண்ணா திருச்சியில் தாத்தா பாட்டியோட   இருந்தபோது..


தாத்தா..இரண்டு மாசத்துக்கொரு முறை வெளியூர் போவார்.


அன்னிக்கு பாட்டிக்கு ஜாலி டே. 


தாத்தாவுக்கு பேக் பண்ண வற்றல் குழம்பு சாதமும் ,தயிர் சாதமும் சேர்த்து எல்லாருக்கும் வெச்சுடுவா..

முதல் நாளே லெண்டிங் லைப்ரரில சொல்லி தனக்கு படிக்க வேண்டிய கதை புஸ்தகமெல்லாம் வாங்கி அடுக்கி..

தாத்தா..கிளம்பினதும்..கடகடனு வேலை முடிச்சு, எதோ பரீட்சைக்கு படிக்கறா போல, உட்கார்ந்து படிப்பா..

நமக்கு கொஞ்சம் போரடிக்குமா?..

"பாட்டி ..தாத்தா ..தஞ்சாவூர் போயிருக்காளா..இல்ல துவாக்குடி போயிருக்காளா?..

அப்படி கேள்வி நாம தூவ..

இல்லையே ..தஞ்சாவூர் நு தான் சொன்னா..

தஞ்சாவூர் என்றால் ராத்திரி தான் வர முடியும்.. 

துவாக்குடினா..சாயந்திரம்..அப்போ சூடா டிஃபன் பண்ணனுமே..??!!

புக்கெல்லாம் பாட்டியை ஏக்கமா பார்க்கும்...

சந்தேகக்கோடு..அது சந்தோஷக்கேடு..😄😄😄


என் சித்தி " அம்மா..இன்னிக்கு lab இருக்கு..லேட்டாகும்னு '..சொல்லிட்டு போவாள்..


" பாட்டி..அவ ஃப்ரண்ட் எஸ்தரோட சினிமா போறானு நினைக்கிறேன்".. நான் அப்பாவியா எதோ சொல்ல..


"பாட்டி ஏன் இப்படி டென்ஷனா இருக்கா..!!! அப்போ நாம கொளுத்திப் போட்டது சந்தேகம்னு ஒரு பட்டாசுனு இப்போ புரியுது.


பத்தாம் க்ளாஸ்  எக்ஸாம் போகும்போது.. எங்க கிளாஸ் படிப்பாளி நம்பர் ஒன்.


எல்லாம் படிச்சாச்சுனு சொல்லிண்டே..புக்கை இப்படியும் அப்படியும் திருப்பி படித்துக் கொண்டே இருக்கும் அவளிடம் போய்..

"இந்த கேள்விக்கு நம்ம டீச்சர் ஒரு பதில் சொல்லிக் கொடுத்தாங்களே..கொஞ்சம் சொல்லேன்னு '..கேட்க..

"இதுவா..எப்போ..???!!

எப்படி நான் மிஸ் பண்ணேன்..

அம்புட்டுதேன்..

சந்தேகத்தை கிளப்பிட்டு எஸ்கேப்ப்ப்ப்..💃💃💃


எங்கம்மாவுக்கு always ஒரு சந்தேகம் உண்டு..


தன்னோடு காது தோடு திருகு ..இருக்கானு அடிக்கடி செக் பண்ணிக் கொண்டே இருப்பா..


ஏதாவது நாம ரொம்ப திட்டு வாங்கிண்டு இருக்கும்போது..

" அம்மா..உன் தோடு..'..


அவ்வளவுதான்..அர்ச்சனை மறந்துடும் அம்மாவுக்கு..💪💪💪💪💃💃


போன வாரம் நடந்த விஷயம்..


ஒரு ஃப்ரண்ட் வீட்டு கல்யாணத்துக்கு , கிஃப்ட் ஒண்ணு ஆர்டர் பண்ணினோம்.


Payment எல்லாம் முடிச்சதும்..

நான் என் வூட்டுக்காரு கிட்ட..

" ஏம்ப்பா..sender address சரியா click பண்ணினீங்களா?..

வேற யாருக்காவது போய்டப் போறது..!!!

ஏம்மா..எல்லாம் முடிச்சப்பறம் சந்தேகமா?..ஒரே ஒரு லுக்கு லுக்கு லுக்கு தான்..😄😄😄


ஆனா பாருங்க ..இந்த சந்தேகம்னு ஒண்ணு இருக்கறதுனால் தான்..

சந்தோஷம் தடை படாம இருக்கும்.


For example..

Long drive போகும் போது..சந்தேகத்துக்கு ஒரு ஸ்டெப்னி..


மூக்கு கண்ணாடி வாங்கும்போது ...

உடைஞ்சுட்டா..முக்கியமான விஷயம் மிஸ் ஆகிடுமோனு..சந்தேகத்தில் ..

ஜோடியா வாங்கிட்டா..ஜாலியா இருக்கலாம்..😄😄


சிலிண்டர் கூட சந்தேகத்துக்கு ..

ஒரு additional இருந்தால் தான்..

ஹாயா இருக்கலாம்..


ஒரு மொபைல் ..பல மொபைல்னு..

சந்தேகத்துக்கு..


Economics படி பார்த்தால்..doubt தான் is creating demand..

எப்புடி???😄😄💪💪💪

..

இவ்வளவு லேட்டா போஸ்ட் போடறோமேனு ..நானே சந்தேகத்தோடு எழுதிக் கொண்டு இருக்க....

திடீர்னு ஒரு சந்தேகம்..

" ஏம்ப்பா..உங்க கஸின் dal and roti சாப்பிடுவாரா..இல்ல..

சந்தேகத்துக்கு ஒரு சாம்பாரும் சாதமும் வெச்சுடட்டுமா?...😄😄😄😄


வூட்டுக்காரர் escapeuuuu..😄😄😄

No comments: