Thursday, October 5, 2023

Madhyamar-சொல்லத்தான் நினைக்கிறேன்

 #சண்டே_ஸ்பெஷல்


#சொல்லத்தான்_நினைக்கிறேன்..


இது ஒரு சூப்பர் உளவியல் டாபிக்..

உறங்கிக் கொண்டிருப்பதை தட்டி எழுப்பறதா?..

உள்ளேயே கிடனு..ஒரு தட்டு தட்டி உட்கார்த்தி வைக்கறதா?..


Bada confusion ..


நினைக்கறதெல்லாம் சொல்ல முடியுமா?..

வண்டி ஓட்டினா ஹெல்மெட் வேணும்..

வைரஸ் வந்தால் மாஸ்க் போடணும்..

வரும் முன் காப்போம் என்பது 

வாயிலிருந்து வார்த்தைக்கு போடும் கடிவாளம்.

வடிகட்டா வார்த்தைகள்.வெச்சு செய்யப்படும்..சரிதானே


கணினியில் தான் எடிட் ஆப்ஷன் இருக்கா என்ன?

கருத்து சொல்றதிலும் இருக்கணும்..cut ..cuttu..


இந்த attitude ஏன் எல்லாருக்கும் வந்தது?

நமக்கேன் வம்பு என்று நகருவதாலா?

நல்ல நட்பு ..நார் நாராய்க் கிழியுமே என்ற பயமா?

நாம சொல்லி சமுதாயம் என்ன மாறப் போகிறது என்கிற எண்ணமா?

வார்த்தைகளை வீணடித்து என்ன சாதித்தோம் என்ற சோர்வா?


மைண்ட் வாய்ஸ் படிக்க பழகின இந்த காலத்தில்..

நம் மெளனம் ..புரியாதா என்ன?


ஆனா..இப்படி சொல்ல நினைத்து..

சொல் என்ன சொல் ..

சொல்வதுனு தடுமாறி.

சொல்லாமலே விடுபட்டு

செல்லரித்து போய்..

நம் செல்களை உருக்கும் ..கஷ்டத்திற்கு..


சொல்லியே விடலாமா என்று..யோசனை தோன்றும் போது..

கொட்டிய வார்த்தைகள் அள்ள முடியாது..

கெட்டியா உங்கிட்டயே வெச்சுக்கோனு...

உள்மனசு கொடுக்கும் வாய்ஸை..

உதறித் தள்ளாமல் இருக்க முடிவதில்லை..


Bitter truth is that ..we love to hear sugar coated words.

எல்லாருக்குமே..மத்தவங்க good books ல இருக்கணும்னு ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருக்கு..


காயப் படுத்த விரும்பாத போதும்..

எக்கேடு கெட்டு போகட்டும் என்ற இரண்டு extreme தான் காரணமோ?

ஆனால்..நம்ம சொல்லாதது ..கேடு விளைவிக்கும்னு தெரிஞ்ச நிமிஷம்..

" மடை திறந்து பாயும் நதி அலை நான்..

மனம் திறந்து கூவும் இசைக்குயில் நான்னு"..

சொல்லிப் போடணும்..ஆமாம்..


அதனால்..எத்தனையோ விஷயங்கள் சொல்லத் தான் நினைச்சாலும்..

வாயைத் திறந்து சொல்லேன்னு..இப்படி வாய்ப்பு கொடுத்தாலும்..

பேசா வார்த்தைகள் ..பொன்னை விடச் சிறந்ததுனு..

நான் கம்முனு அப்படிக்கா போறேன்..


மனதில் இருப்பதைச் சொல்ல..

மணிகளாய்..சொற்களைத் திரட்டிய அளவுக்கு..

மனவலிமை திரட்ட முடியவில்லையே...

நான் என்ன செய்வேன்????

No comments: