#ஸண்டே_ஸ்பெஷல்
வீல்..
வீல் ..வீல் ...ல தான் வாழ்க்கையே ஆரம்பிக்கும்..
நடுவுல நாம் போடும் வீல் சத்தம் இருக்கே..சாமி..
என் 👸 பொண்ணு குழந்தையாக இருக்கும்போது.. டொம் டொம்னு..தூக்கத்தில கட்டில்லேர்ந்து தாவி குதிச்சு..கீழே விழுந்து..வீல் வீல்னு அழறது அடிக்கடி நடக்கும்.
எப்பவுமே ..கட்டிலை ஒரு சைட் சுவற்றோடு ஓரமோ ஒட்டிப் போட்டு..
செவுத்து ஒரத்தில் நானு..நடுவுல அவ..அவ தொபுக்கடீர்னு விழாம இருக்க..அவர் அடுத்த சைட்டில..
ஒரு ஜுலை மாத விடிகாலை 3 மணி..
டெல்லி கரோல்பாக் வீட்டில்..
திடீர்னு..அவ வீல் தாங்க முடியல..
நானு என்னனு எழுந்து பார்க்கலாம்னா..என்னால எழுந்துக்க முடியாம ஏதோ தள்ளற feeling.
என் பொண்ணை நகர்த்த முடியலை..எதோ பிடிச்சு இழுக்குது.
பார்த்தால்..என் வீட்டுக்காரர் அவ மேல உருண்டு கிடக்கார்..
நகர்த்த முடியலை..
குழந்தை சட்னி ஆகிடப் போறாளேனு ....
வீல் ..வீல்னு கத்திக் கொண்டே..பக்கத்தில இருக்கற wall ஐப் .. பிடிக்க try பண்றேன்..என் கை விட்டு நழுவி நழுவிப் போறது..
ரொம்ப அந்த செவுத்தை அழுத்தவும் பயம்..
பழைய வீடு..ஃப்ரஸ்ட் ஃப்ளோர் வேற..
பொல பொலனு எங்கியாவது செங்கல் கொட்டினால்..நாங்க ரோட்ல தான்..
இருட்டுல 😉 கண்ணாடி வேற எங்க போச்சுனு புரியல..😃😃😃😃👀👀👀
"ஏங்க..ஏதோ நம்ம பெட் ஆடற மாதிரி இல்ல..?"
சிம்பொனி ம்யூசிக் கேட்டுட்டு தூங்கற பழக்கம் உள்ள வூட்டுக்காரர்....சிங்கம் போல..சிங்கம் போல..
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி...
எழுந்துக்க ட்ரை பண்றார்..
"முடிலம்மா..முடிலனு..'வசனம் பேச..
..
"ஏங்க..இந்த வீட்ல ஏதாவது பேய் இருக்குமோ?..
அப்பவும்.." ஏம்மா..நீ இருக்கும்போது..!!!!???😠😠😠😠😠
தத்தக்கா பிதக்கானு அங்கேயும் இங்கேயும் balance பண்ணி ....
"ஏங்க ..கட்டில் சுத்தற மாதிரி இல்ல...???
மண்டையில் சுர்ருனு ஏதோ உறைச்சது..
" ஐயய்யோ..earth quake..'..
அப்போதான் தெருவிலும் பல குரல்களில் ஒரே வீல்...வீல் சத்தம்..
இந்த வீல்ல..ஏதோ..வில்லங்கம்டா சாமினு ..
நீச்சே ஆஜா....நீச்சே ஆஜானு ..எல்லா வீட்ல இருந்தவங்களும் இப்போ..நடுத்தெருவில்.
👶 குழந்தை யைத் தூக்கிக் கொண்டு தப தபனு மாடியிலேர்ந்து
நாங்களும் அந்த வீல் கும்பலோடு இணைந்து..
ஒருவழியா..சுத்தறது நின்னு போச்சு..கத்தறதும் நின்னு போக..
போயே போச்சே..போயிந்தே..its gone என்று கொஞ்ச நேரத்தில் எதுவுமே நடக்காதது போல..
எல்லாரும் அடுத்த ரவுண்டு தூக்கத்துக்கு போக..
ஆனால்..இன்னிக்கும் மறக்காத வீல் ..வீல்.இது..😀😀😀😀😀
No comments:
Post a Comment