#ஸண்டே_ஸ்பெஷல்..
#விடமுடியாத_பழக்கம்..
ஆஹா..ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன் இதைப் பத்தி எழுதணும்னு..😃😃
நன்றி அட்மின்ஸ்.
.இந்தப் பதிவு மூலம்..என்னை சில பழக்கத்துக்கு அடிமையாக்கிய..
மாண்புமிகு அம்மா...வளர்த்த பாட்டிகள், சித்திகள், பக்கத்து வீட்டு எதிர்த்த வீட்டு மாமிகள் எல்லாரையும் வாழ்த்தி வசை பாட வந்துட்டேன்..😃😃😃
' 👶 குழந்தைக்கு சளி புடிச்சுடும்'..வருமுன் காப்போம்னு..advertisements பார்த்து..அப்படியே பாட்டிலிலிருந்து வழித்து எடுத்து..மூக்கிலும் நெஞ்சிலும் விக்ஸால் குளிப்பாட்டிய..கமலா பாட்டியே..
இன்னைக்கும் தூங்கணும் என்றால் தலகாணி அடியில் விக்ஸ் இருந்தே ஆகணும்..அமிர்தாஞ்சன் ..inhaler..இலவச இணைப்புடன்..💪💪💪
" உன் தலையைப் பார்த்தேனா..அதான் கல்லைப் போட்டேன்'...
அட..தோசைக்கல்லுங்க..
சுடச்சுட மொறு மொறுனு..ஸ்கூலிலிருந்து பையைத் தூக்கி ஆடி ஆடி நடந்து வரும் என்னை தெரு முனையில் பார்த்ததுமே கல்லைப் போட்ட அப்பாவின் அம்மா..ரங்கநாயகி பாட்டி..😋😋😋
இன்னிக்கும்..hot pack ல வெச்சுட்டு போயேன்னு சொன்னாலும் மனசு கேட்க மாட்டேங்குதே..
அம்மா..உஸ்..என்ன சொல்ல...ஒரே strict ஆபீஸர். Perfection to the core.😃😃
சமைக்கும்போதே மேடையை துடைத்துக் கொண்டே இருக்கணும்..ஒரு அழுக்கு இருக்கக்கூடாது. ம்ம்ம்ம்ம்..இப்படியே நான் பழகி..என் பொண்ணும் இப்படியே ஆகறா..தேவுடா..இது எங்க போய் முடியுமோ?🤔🤔
ஏதோ மார்க்கெட் போனோமா..காய் வாங்கினதை fridge ல வெச்சோமா..?..
சான்ஸே இல்ல.
பச்சை மிளகாய்..அதன் கொம்பை இழக்கணும்..
கொத்தமல்லி..வேர் விட்டு விலகணும்..இப்படி ஒரு பெரிய process..
அட ..சொல்ல மறந்துட்டேனெ..யாராவது விருந்தாளி வருகிறார்கள் என்றால்..ஒரு வாரம் முன்னே மெனு என்னனு..பெரிய discussion..
'உங்களுக்கு என்ன பிடிக்கும்..? போன முறை செஞ்சதே செய்யலாமா? இப்போ புது சாய்ஸ் இருக்கா?..
நம்ம கேக்கற கேள்வி இருக்கே..
அம்ம்மா....மா..why don't we order outside?..
பொண்ணு சொல்றது..நம்ம 👂 காது..கேக்காதே..😃😃😃
ஒரே ஒரு புடவை..only one தான்னு கடைக்கு கூட்டிப் போகும்.அம்மா..
ஹி..ஹி..ஹி...இது சூப்பர்..அது ஆஹா..இது ஓஹோனு சொல்ல.
பர்ஸ் கரையும். பை வெயிட்டு..
அதே பழக்கம் இப்போ ..பாவம் வூட்டுக்காரர்..😭😭😭
அடுத்து எங்க சித்தி..சித்தி சொல்லை தட்டாதேனு..இன்னிவரைக்கும்..
' யாராவது வேலை செய்யறதைப் பார்த்தால்..உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமானு கேட்டு...
இப்போ எல்லாம் அவங்க privacy இல் தலையிடணுமானு..கொஞ்சம் யோசனை..🤐🤐
என்னுடைய சின்ன சித்திக்கு எதைச் சாப்பிட்டாலும் பல்லு உடனே தேய்க்கணும்..
ஹி..ஹி..ஹி..நானும் அதே தான்..
அகிலாவுக்கு போரடிச்சா பல் தேய்ப்பாள்னு..ஊரே கேலி பண்ணும் பழக்கம்😁😁😁😁😁
சாதம் சூடாச் சாப்புடணும்..ஆவி பறக்க ரசம் ..கிடுக்கியில ....
ஆனால்...காஃபி ஆறி இருக்கணும்..🤣
காலையில எழுந்ததும்....நாம போய் எல்லாரையும் எழுப்பி எதுக்கு கெட்ட பேர் வாங்கணும்..அதுக்குத்தான் ..MS அம்மாவும் சூலமங்கலம் ஸிஸ்டர்ஸும் இருக்காங்களே..ஹி..ஹி..ஹி..எவ்வளவு நல்ல பழக்கம்..விடவே முடில..😃😃😃
யாரையாவது பார்க்கப் போனால் ..ஒரு சம்படத்தில் நம்ம கையால செஞ்சதை எடுத்துக் கொண்டு போகணும்னு அம்மா ஆர்டர்..இன்னி வரைக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறேன்..
ஆனால்..அந்த சம்படம் கொஞ்சம் திருப்பித் தந்தடறேளானு ஹி..ஹி..வாங்கிண்டு வந்துடுவேன்..பாவம் அவங்க அதுக்கு வேற சேர்த்து சோறு போடணுமே..😄😄😄
உட்கார்ந்து சாப்பிட்டதை விட நின்றே சாப்பிட்டு ..அப்படியே பாத்திரம் ஒழிச்சு போட்டு...விட முடிலயே..😄😄😄
📺 டீ.வி போட்டுவிட்டு..அப்படியே சாய்ந்து..ஒரு குட்டித்தூக்கம்..எந்த 🎦 சினிமாவும் நான் instalment ல் பார்க்கற பழக்கம் தான்.
இப்படி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு..
நல்லதா..கெட்டதா....🤔🤔🤔😃😃😄
No comments:
Post a Comment