Friday, October 6, 2023

Madhyamar- ஆன்மீகப் பயணம்

 #Sunday_special

#ஆன்மீகப்_பயணம்.


எங்க வீட்டுக்காரர் ஆபீஸ் இருந்த  இடமெல்லாமே எனக்கு ஆன்மீகப் பயணம் தான்.

மலையும் மலை சார்ந்த இடமும்..

நீரும் நீர் சார்ந்த இடமும் என்று வாழ்க்கை ஓட்டம்.


Geography ல புரியாமல் மண்டை குழம்பினதெல்லாம்..நேரில் சென்று அனுபவித்தேன்.


விடியல் வேளை ..வாசல் திறக்க..

விந்திய மலை..

Gate திறக்கும்போதே தெரியும் கேதார்நாத்..

கதவை திறந்து உள்ளே வந்துவிடுவாளோ..கங்கைப் பிரவாகம்.

ஜாலம் காட்டும் Joshimath


இப்போ இருப்பது concrete jungle என்றாலும்...

அமைதி தவழும் இங்குள்ள கோயில்கள் செல்வது என்னுடைய daily routine. அதைவிட இங்கே கிடைக்கும் பிரசாதம் ..ஆஹா..ஓஹோ தான்.


துலா ஸ்நானம் சென்ற ஸ்ரீரங்கப்பட்டணம் ..அங்கே அமைதி தவழ அமர்ந்திருக்கும் நிமிஷாம்பாள்..

நிமிஷத்தில் நம் குறை தீர்ப்பவளாம்.


அம்பாளின் தரிசனம் கண்டு வந்து ..நான் எழுதிய பாடல்..


நிமிஷாம்பாள்..


காவிரி் கொஞ்சி ஓடும்

கரை அருகே அமர்ந்தவளே

'க'ஞ்சம் எனும் திருநகரில்

காட்சி தந்து காப்பவளே..


தஞ்சம் புகும் பக்தர்களின்

நெஞ்சின் பாரம் இறக்குபவளே..

காந்தக் கண் உடையவளே

சாந்த சொரூபி நீயே..


நிமிஷத்தில் குறை தீர்ப்பவளே

நிமிஷாம்பாளென நாமம் கொண்டவளே

தடை யாவும் நீக்குபவளே

கரை சேர வழி காட்டுபவளே


வேதனையும் விக்கினம் யாவுமே

விட்டகல அருள் புரிபவளே..

விருப்பங்கள் வரிசையில் நிற்க

திருப்பமும் திருப்தியும் தருபவளே..


வரிசைப் படுத்தினேன் வேண்டுதலை

வரிசையில் நின்ற வேளை

தரிசனம் கிட்டிய நொடியில்

தெரியலையே என் குறை சொல்ல..


ஒன்றிரண்டா என் கோரிக்கை

ஓராயிரம் மனக் கிலேசம்..

ஒரு நிமிஷம் போதாதே

ஒவ்வொன்றாய் எடுத்தி யம்ப..


சன்னதியில் உன் திருக்கோலம்

ஜன்ம வினை தீர்த்ததம்மா..

திரும்பி நானும் வரணுமென்ற

தீராத ஆசை பொங்குதம்மா..


அறியாதவள் நீ அல்ல

ஆராய்ந்து அருள் புரிவாய்

கரம் குவித்து தொழுகின்றோம்

வரமும் நீ அள்ளித்தா..


இந்தக் கோயில் சென்று வந்தபின்..

அடிக்கடி நினைவுக்கு வருவாள்.


உன்னை திருப்பி நான் எப்போ வந்து பார்ப்பேனோ? 


என் நினைப்புக்கு ஒரு நாள் விடை கிடைத்தது.. என் மன்னி மூலம்.


அடடே..உனக்கு தெரியாதா..இங்கேயே jayanagar ல இருக்காளே..


அதே வழியில் ஆயிரம் முறை சென்றிருக்கேன்..பிள்ளையார் கோயில் என்று வாசலிலே கும்பிடு போட்டு செல்வேன்..

ஆஹா..எனக்கு பக்கத்திலேயே இருக்காளா அம்பாள்..?


இவ்வளவு நாளா..தெரியாமல் போச்சே..

அவள் லீலை அது தானே?


அப்புறம் என்ன?

அடிக்கடி அவள் முன் போய் நிற்பேன்..

அற்புதமான அலங்காரத்தில் ஜொலிப்பாள்.


கவலைகள் எல்லாம் கொண்டு செல்வேன்..அவளைக் 

கண்ட மாத்திரத்தில் ..அவள்

அழகில் சொக்கிப் போய்..

எதுவும் கேட்காமல்..திரும்பி வந்து விடுவேன்..


இந்தக் கோயிலுக்குள் நுழையும் முன் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொள்வேன்..


தாயே..உன் சன்னதியில் இருக்கும் நிமிஷங்கள்..என் மனசில் எந்த கெட்ட எண்ணமும் வராமல் நீ தான் காக்கணும்..

நிமிஷத்தில் அருள்பவளாச்சே..

..


தரிசனம் முடித்தது..

தட்டில் பிரசாதம் காத்திருக்கும்..


மனசும்..வயிறும் நிரம்பும்..


அங்கே இருக்கிறாயே என்றேன்..

இங்கேதான் உன் பக்கத்தில் இருக்கிறேன் என்றாள்..

Pandemic வந்த பின்பு..

பார்த்தும் தான் நாளும் ஆச்சு..


ஆனாலும்..

உன் நினைப்பு மட்டும் எப்போதும்..

சொல் செயல் எண்ணம் எப்போதும் தூய்மை என்ற திண்ணம்.


<b>ஊர் ஊராகத் தேடவா..உள்ளத்திலே தேடவா என்ற கேள்விக்கு..


இப்போது பதில் கிடைக்க ஆரம்பிக்க..

நிமிஷாம்பாள்..கண் சிமிட்டி சிரிப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.


No comments: