#செவ்வாய்_கவிதை
#தபால்பெட்டி
Thanks Amaravathi mam..
நாங்கள் சுமைதாங்கிகள்
கயிற்றில் கட்டித் தொங்க விட்டாலும்..
சிமெண்ட்டு தளத்தில்
கால் கடுக்க நின்றாலும்..
கொட்டும் மழையே என்றாலும்..
காய்ச்சும் வெயில் என்றாலும்
காற்றும் வீசி அலைக்கழித்தாலும்..
உங்கள் நம்பிக்கை நாங்கள்..
திறக்க மாட்டோமே..எம்
திரு வாய்தனை..
பணமே செலவில்லா..
பாதுகாப்பு பெட்டகம் நாங்கள்.
பெறுனரிடம் சேரும் வரை
பொறுப்பாய் இருப்போமே..
ஆதலால்..மக்களே..
கொட்டிய சொற்களை.
எப்படி அள்ள முடியாதோ?
ஒட்டி ..பெட்டிக்குள் போட்ட கடிதமும் ..திரும்பக் கிட்டாது..
அஞ்சல் பெட்டியில் சேர்க்குமுன்
ஆற அமர யோசியுங்க..
உங்கள் அஞ்சல்கள்..
❤️ அன்பையும் ஆறுதலையும்
அள்ளித் தரும்..
ஏஞ்சல்களாக இருக்கட்டும்..
ஏசல்கள் வேண்டாமே.
பூசல்கள் வேண்டாமே..
அன்புச் சுமை தாங்க.
ஆயத்தம் நான் எப்போதும்..
ஆசை உண்டெனக்கு..
என்னுள்ளே விழும்
கார்டும் கவரும்
பார்டர் தாண்டிச் சென்றாலும்..
Reader மனதை நோகடிக்காமல்
Matter எல்லாம் ..மகிழ்வைத் தரட்டும்..
தபால் பெட்டியின் ஆசைக்கு
தடா இல்லதானே..மக்களே..
அன்புடன்
அகிலா
No comments:
Post a Comment