#ஸண்டே_ஸ்பெஷல் 15-09-22
#பரிபூரண_திருப்தி
Generally speaking பரிபூரண திருப்தி என்பது எப்போது ஒருவருக்கு கிடைக்குமென்றால்...
தான் போட்ட கோடில் அழகா ஒரு ரோடு போட்டு வண்டி ஜம்முனு ஓடினால்....வேறென்ன..நம்ம ப்ளான் படி நடந்தாலே மனசுக்கு ஒரு அலாதி திருப்தி கிடைக்கும். அதுக்கெல்லாம் ..லக்கு வேணும்..லக்கு வேணும்.
ஆனால்..சில சமயம் ..இப்படியெல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்குமானு .....
இன்னிக்கு நினைச்சாலும்..
ஆஹா..பரம திருப்தியான தருணம்னு நினைத்து நினைத்து பார்க்கும் ஒரு சம்பவம்.
தேவபூமி..டெஹ்ராடூனில் இருந்த சமயம்..
landline phone அடித்தது ஒரு நாள் மதியம். மறுமுனையில் பரிச்சயமான ஒரு குரல். பல நாள் பழகிய குரல்.
நாங்களோ நாடோடி போல ஊர் பல திரிந்ததால், சில தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
அதில் ஒரு குரல் தான் ..
" aunty..are you at dehradun?'..உங்க உதவி வேணும்..' அவன் பட படவென்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பொரிந்து தள்ளினான்.
விஷயம் இதுதான்.
அவர்கள் மிக நெருங்கிய சொந்தக்காரர்..மைசூர் அருகில் இருக்கும் ஒரு கோயிலிலைச் சேர்ந்தவரும் அவர் மகன்களும் 'சார் தாம்' யாத்திரை வந்திருக்கிறார்கள்.
ஹரித்வாரில் குளிக்கும்போது ,பெரியவர் தடுமாறி கீழே விழுந்து அடிபட்டதில், சீரியஸாகி அருகில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் , அவர்கள் தினசரி. உணவுக்கு மிகவும் கஷ்ட்டப்படுவதாகவும்....நீங்கள் தான் எப்படியாவது உதவி செய்யணும்னு கேட்டுக்கொண்டான்.
பாவம்....ஆஸ்பத்திரியில் கிடைக்கும் ரொட்டி டாலும், மசாலா சேர்த்த உணவுகளும் பழக்கமே இல்லாதவர்கள்.
ஆனால் என் வீட்டிலிருந்து 30 கிமீ. பஸ் வசதியெல்லாம் சரியாக கிடையாது. மேலும் என் பெண்களை விட்டு விட்டு தினமும் போய்ட்டு வரவும் முடியாது.
' என்னால் போக முடியாது. ஆனால் என்ன வேணுமோ சமைத்து வைக்கிறேன்னு வாக்கு கொடுத்தேன்.
அதன்படி தினமும் turn போட்டுக் கொண்டு, attendant ஆக இருந்த அவர் மகன், மாப்பிள்ளை
மத்தியானம் என்னோட வீட்டுக்கு வந்து , குளித்து ,பூஜைகள் செய்து , மூன்று வேளைக்கு சேர்த்து காஃபி ,டிஃபன் சாப்பாடு ,ஜூஸ் ..என்று கட்டிக் கொடுத்து விடுவேன்.
இப்படி ஒரு மாதம் என்னால் முடிந்தவரை அவர்களுக்கு செய்தேன்.
எப்படியாவது பெரியவரைப் பார்க்கணும்னு ஆசை.
ஆனால்..பயங்கர மழைக்காலம். கரண்ட் பாதி நேரம் போய்டும். குழந்தைகளைத் தனியா விட்டுட்டு போக முடியாது. சரி ..எப்படியும் டிஸ்சார்ஜ் ஆகும்போது ஓடிப் போய் ஏர்ப்போர்ட்டிலாவது பார்த்துடலாம்னு ஒரு எண்ணம்.
நம்ம சவுத் சைட் மாதிரி ..அங்கே treatment எல்லாம் அவ்வளவு சிறப்பா இல்லாத காலம்.
பெரியவர் அந்த ஆஸ்பத்திரியிலேயே உயிர் நீத்தார்.
பார்க்காத ஒரு ஆத்மாவுக்காக ..ரொம்ப அழுதேன். என்னடா இது.. ஒரு நடை போய்ட்டு பார்த்திருக்கலாமேனு மனசு அடித்துக் கொண்டது.
செய்தி கேட்டு, பெரியவரின் துணைவியார் எனக்கும் ஃபோன் செய்தார்.
' என் பொண்ணு மாதிரி அவருக்கு வேணுங்கறதெல்லாம் செஞ்சு கொடுத்தியே மா..நீ நன்னா இருக்கணும். அவரைப்போய் பார்க்கலைனு நீ வருத்தப்பட்டியாமே..அதை விட அவருக்கும் ,அவரைப் பார்த்துக் கொண்டவர்களையும் உன் குடும்பத்தில் ஒருத்தர் போல கவனிச்சியே..அதுவே ரொம்ப நல்ல விஷயம் மா..
இங்க வரும்போது கண்டிப்பா என்னை வந்து பார்க்கணும்னு"
அன்புக் கட்டளை இட்டார்.
பாவம்..அந்த மாமி..எப்படியும் பெரியவர் ஊர் திரும்பிடுவார்னு நம்பிக்கையில் இருந்தார்.
இன்னிக்கு நினைச்சாலும்..' பகவானே..எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த உனக்கு கோடி நமஸ்காரம்னு சொல்லுவேன்.
ஏதோ பரம திருப்தியா ஒரு நல்ல காரியம் செய்ய ,என்னை ஒரு கருவியாக்கினானேனு...
நினைக்கும் போதே....
கண்ணில் துளிர்ப்பது ஆனந்தக் கண்ணீரா ...?
அவனே அறிவான்.


No comments:
Post a Comment