Thursday, October 5, 2023

Madhtamar-காதல்

 #காதல். ..14-02-22


கிச்சனில் கீரை நறுக்க. உதவும்போது..அவர்

கீர்த்தி பாடச் சொல்லும்.


மால் வாசலில் ..

மணிக்கணக்காய் நிற்கும்போது..

மனுஷன் ..மாணிக்கம்னு தோணும்..


 நானு படபடனு பேசும்போது..

பரப்பிரம்மமாய் ..ஒரு பார்வை..

ஆத்தா பெத்த புள்ள..

நல்லா இருனு சொல்லத் தோணும்..


நாரோடு சேர்த்து ..

வாழைத்தண்டை நான் சமைக்க..

நாரும்..நல்லதேனு

நல்ல வார்த்தை சொல்லும்..


*சாப்பிட்டியா நீ என்று கேட்கும்போது காதலை விட கரிசனம் இருக்கும்.


*பசங்க ஸ்கூல்லேர்ந்து இன்னும் வரலையானு கேட்கும்போது கண்டிப்போட  கவலை இருக்கும்.


*புடவை கடைக்கு கூட்டிப் போய் ' உனக்கு பிடிச்ச பத்து முதல்ல செலக்ட் பண்ணு..அதிலிருந்து ஒன்று எடுத்துக்கோ என்று வாய் சொல்லிவிட்டு பக்கத்து கவுண்டரில் தனக்கு பிடித்த கலரை நாலு தடவை உற்று பார்த்துவிட்டு..' இதை எடுத்துக்கோயேன்' என்று வாய் விட்டு சொல்லாத வாத்ஸல்யம்.

( பத்து வருஷத்துக்கு அப்பறம் தான் இந்த expression புரிஞ்சது)


*சாப்பாடு வாயில் போடும் முன்னே சூப்பரா இருக்கு என்று சொல்லும் சொக்கத் தங்கம்.

( பின்ன..அடுத்த வேளை half boiled தட்டுல விழுமே)


*நீ போய்ட்டு வா.நான் இருக்கேன் இங்கனு சைக்கிள் கேப்பிலும் சுதந்திரம் தேடும் ஜீவன்.


*மெயில் அடிச்சாலும் சரி ,மெசேஜ் செஞ்சாலும் தன் மனைவி கண்டிப்பாக பார்க்க மாட்டாள்னு தெரிஞ்சும் விடா முயற்சி விக்கிரமாதித்தர்கள்

( எத்தனை group ல இருக்கோம்..எத்தனை போஸ்ட் போடணும் நமக்கு)


*valentine day க்கு gift என்னன்னு கேட்டால் ..என் "wallet "மட்டுமல்ல என் " வாழ்க்கையும்' உன் கையில் தானே இருக்குனு கவி பாடும் கணவர்கள்.


*ஊர் வம்பு சொல்லும்போது தலையை தலையை ஆட்டி கேட்டுபுட்டு நாம கேள்வி கேக்கும்போது 'இப்ப யாரைப் பத்தி சொன்னே' என்று பல்பு கொடுக்கும் (life) partner கள்..


Valentine day ..

வரும் போகும்..

வருஷம் போனாலும்..

வற்றாத அன்புடன்

வாழப் பழகுவோம்.


உஸ் ..அப்பா...என்னால் முடிஞ்சதை சொல்லிட்டேன்.


valentine day..வற்றாத அன்பு வாரி வழங்கும் நாளாக இருக்கட்டும்..


சரி சரி...இதை படிச்சுட்டு..

' நாளைக்கு நானே சமைக்கறேன்னு " ..

நாம வெச்ச ஐஸுக்கு மயங்கி..

ஐட்டம்ஸ்..அடுக்கவும் வாய்ப்பிருக்கு😄😄😄

No comments: