Thursday, October 5, 2023

Madhyamar-அந்தாதி

 #PPAP-1

#அந்தாதி-3. (21-05-22)&


#சின்னப்_பசங்க(இல்ல)_

#நாங்க..


விடுமுறை இன்று ஆரம்பம்

விதி முறைகள் மாறிவிடும்.


மாறி மாறி விளையாட்டு

ஏரி நதியெல்லாம்  ஊர் சுற்று


சுற்றுலா போக காசேது

வற்றிப் போயிருக்கே நிலங்களுமே..


நிலமக ளிங்கே காத்திருக்கா

நீல மேகங்கள் கருமையாக


கருமைக்குள் கருணை வைத்த

கடவு ளவன் செயலன்றோ..


செயலிலே சுத்த மிருந்தால்

செல்லு மிடம் சொர்க்கமே..


சொர்க்க வாசலின்  திறவுகோல்

சின்னப் பசங்க நம்கையில்


கைகோர்த்து நாம் சேர

காணும் கனா நிஜமாகும்..


நிஜமாக்கும் அவ் வித்தை

நிச்சயம் உள்ளது நம்மிடம்தான்..


நம்மேல் வைப்போம் நம்பிக்கை.

நம்மால் இயலாதது ஒன்றுமில்லை.

No comments: