Thursday, October 5, 2023

Madhyamar- கவிதை தினம்

 #கவிதை_தினம்


கதையொன்று நான் எழுத..

கவிதை போல அழகு என்றார்..


கவிதையொன்று நான் புனைய.

கதை போல நடை என்றார்..


பெரிய கதைக்குள்..

சிறிய கவிதை உண்டு..


நாலு வரிக் கவிதைக்குள்..

நாலாயிரம் கதை இருக்கும்..


விதைதான் வெளிவருமே

க(வி) (க) தையாய்..


தள்ளுவோமே எழுதி..

தள்ளாடும் வயது வரை..


இனிமே கேப்பீங்களா சார்..

கவிதை எழுதுனு? 😄😄😄😄😄

No comments: