Thursday, October 5, 2023

Madhyamar- கவிதை

 #செவ்வாய்_கவிதை


நன்றி பாரதி சந்திரசேகர். அருமையான படத்திற்கு..என் சிறு க(வி)தை


குச்சியாக இருக்கும் உனக்கு..இந்தக்

குச்சி ஒண்ணு தேவையா?


கம்பு சுத்தும் காலமெல்லாம்  கடந்தே போச்சு..

தெம்பாய் என் கை புடிச்சு நடந்து வா நீயும்..

வம்பு யாரு பண்ணுறானு ..நானுந்தான் பாக்குறேன்..

நம்பு என்னை ராசா..அட

நம்பு ராசா நீயும்..


என் முன்னே வாலாட்ட ..

யாருக்கிங்கே தைரியம்..?

கவலை விட்டு நட நீயும்..

கைக் கோர்ப்போம் நாமுந்தான்


வஞ்சமிகு உலகினிலே

வாயில்லா ஜீவனிங்கே

வாஞ்சையுடன் பேசும் படம்..

நெஞ்சத்தை அள்ளுதே..

நெஞ்சத்தை அள்ளுதே

No comments: