#ஸண்டே_ஸ்பெஷல்
பிரிந்தவர் கூடினால்..
"அம்மா..கபிக்கும்..குஷிக்கும் சாப்பாடு கொடுத்தியா?.."
"என்னமா பேசிண்டிருந்த ?.."
" என்னைத் தேடினாளா ம்மா இவங்க ரெண்டு பேரும்?"..
ஸ்கூல் பஸ்லேர்ந்து இறங்கி..ஓட்டமும் நடையுமாக கேட்டை வேகமாகத் திறந்து ,உள்ளே நுழையும்போதே..இத்தனை கேள்விக் கணைகளுடன் நுழைவாள் என் பெண்..
" செல்லமே..லட்டுவே..ஜாங்கிரியேமைசூர்ப்பாகே'....ஜூ..ஜூ..ஜூ....
பட்டுடா..'..பொண்ணு ஆரம்பிக்க..
(இது எங்க வீட்ல குட்டிப் பாப்பாக்களைக் கொஞ்சும் standard பாஷை.)..
"இன்னிக்கு எனக்கு maths test ரொம்ப tough ..அம்மா கிட்ட சொல்லாதே என்ன...!!!"..
" என் ஃப்ரண்டோட அம்மா இன்னிக்கு நூடுல்ஸ் கொடுத்திருந்தா..என் லஞ்ச் பாக்ஸை அவ கிட்ட கொடுத்துட்டு..நான் அவளோடதை சாப்பிட்டுட்டேன் தெரியுமா?..
கண் சிமிட்டியபடி..சகல விஷயமும் அவங்களோட பகிரப்படும்..
இன்னிக்கு ம்யூஸிக் கிளாஸ்ல புதுசா ஒரு ஃப்ரண்டு கிடைச்சிருக்கா..உன்னைப் பார்க்க வரேன்னு சொல்லி இருக்கா..நாம எல்லாரும் ஜாலியா விளையாடலாம்..
"பாரும்ம்மா..நான் பேசறது இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி புரியுது பாரு..
என் பேரு சொல்றதுக்கு ட்ரை பண்றா ..பாரும்மா.."
எங்க சின்ன உலகத்துக்குள்..
இன்னும் ரெண்டு. சின்ன..சின்ன..
பச்சைக்கிளிகள்.
பச்சைக் கிளிகள் தோளோடு..பூலோகம் ஆனந்தத்தின் எல்லை ..என்று..எங்க பொழுது ஓடும்.
சொல்ற பேச்சை கேட்காமல் ,பொண்ணு அடம் பிடிக்கும் போது..
' நீ சொல்றதை உன்னோட கிளி எப்படி கேக்கறது பாருனு'..
அம்மாவின் என்னோட ஆதங்கம்..
அது தனி எபிஸோட்..
அதை வாக்கிங் கூட்டிண்டு போக முடியாது..ஆனால் டாக்கிங் செஷன் உண்டு..
பின் தோட்டத்தில் ,அவர்களின் கூண்டைக் கொண்டு வைத்ததும்..
அந்தப் பக்கம் ஜாலியா பறந்து போயிண்டிருக்கும் கிளியெல்லாம் இவங்களோட அரட்டை அடிக்கும்.
(இது நான் டேஹ்ராடூனில் இருந்தபோது ..அங்க தான் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தோம்)
என்னமா..பேசுவாங்க..யப்பா
எனக்குத் தான் புரியாது..
கூண்டை உள்ளே கொண்டு வந்து வெச்சதும்..கொஞ்ச நேரம்..கபியும் குஷியும் எதுவும் பேச மாட்டாங்க..
மனசுக்கு கஷ்டமா இருக்கும்..
இவங்கள கஷ்டப்படுத்தறோமோனு ஒரு குற்ற உணர்ச்சி..
பொண்ணோ..ஆசை ஆசையா வாங்கி வெச்சிருக்கா...
ஒரே குழப்பம்.
அரையாண்டுத் தேர்வு லீவ் வந்தது. செம்ம குளிர் குளிரும் ..டேஹ்ராடூன்
காலையில் கிளிகளின் conversation and outting time அவளிடம் ஒப்படைத்தேன்.
எப்படி ஹேப்பியா இருக்கு பாரும்மா..
சொன்னவள்..இரண்டொரு நாளில் , கபி குஷியும் உள்ளே வந்ததும் சோர்ந்து போவதைக் கண்டாள்.
" அம்மா...இந்த சண்டே என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வராம்மா..கபி குஷியோட விளையாட..'..
சூப்பர் மொட்டை மாடி இருக்கும் வீடு..
சுத்தி பார்த்தால் யூகலிப்டஸ், மா,லிட்சினு மரங்களும்..அப்படியே mussoorie ல snowfall தெரியும்.
எப்பவும் போல சுடச் சுட கட்லெட்,நூடுல்ஸ், ரொட்டி, பனீர் சப்ஜி எல்லாம் பண்ணி..
மொட்டை மாடி வெய்யில்ல குளிர் காய்ந்து அரட்டை கச்சேரியுடன் ஒரே கொண்டாட்டம்.
இவங்களப் பார்த்துக் கொண்டிருந்த கபிக்கும் குஷிக்கும் ..கூட அன்னிக்கு ஒரே ஹேப்பி மூட்.
சாப்பிட்டாச்சு..
" ஃப்ரண்ட்ஸ் ஒன் மினிட்"..
என் பெண்ணின் குரல் எல்லாரையும் அவள் பக்கம் திரும்ப வைத்தது.
டக்கென்று கபி குஷியிடம் சென்றாள்.
கூண்டின் கதவைத் திறந்தபடி..
ஒன்றும் புரியாமல் எல்லாரும் விழிக்க..
"Bye dears..அதோ உங்க family and friends அங்கே பறந்துண்டு இருக்காங்க..go..join them..
But don't forget me..'.."
ஒரே ஒரு செகண்ட் தான்..
போயே போச்..its gone..
பறந்து போனாரே..எம்மை மறந்து போனாரே..
ஒரு நிமிஷம் எல்லார்க் கண்ணும் கலங்கியது.ஆனந்தக் கண்ணீர்.
திடீர்னு வீட்ட்ல ஒரு vacuum.
ஆனால் கபியும் குஷியும் நிச்சயம் எங்களை வாழ்த்தி இருப்பாங்க..
ஒரே ஒரு மாசம் தான் எங்களோட இருந்தாலும்..ஒரு உறவு..
ஒவ்வொரு நாளும் என் தோட்டத்தின் வழியே ..
பறந்து செல்லும் கிளிக் கூட்டம் பார்ப்போம்..
" அம்மா..இதுல நம்ம் கபியும் குஷியும் உனக்கு அடையாளம் தெரியறதா ம்மா..என்ன பேசிண்டு இருப்பா?..நாம அவங்களை நல்லா கவனிச்சோம்னு சொல்லுவா இல்ல.. உன் உப்மாவை கபி மிஸ் பண்ணும்மா..எத்தனை cute ஆ சாப்பிடும் இல்ல..
அவள் கேள்விகளுக்கு ஒரே பதில்..
சண்டே டாபிக் தலைப்பு தான்..
பிரிந்தவர் கூடினால்... எத்தனையோ இருக்கும்டா பேச..
😃 கிளிப்பேச்சுதான்..கலகலப்பேச்சுதான்.
எங்கள் வாழ்வில் நீ வந்தது விதியானால்..
நீ எந்தன் உயிரன்றோ..
கூண்டில் அடைத்து வைத்தோம் அன்று..
ஆனால்..இன்னும் எங்க மனசில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் இவர்கள்..
கடவுள் கொடுத்த mission இதுனு நினைப்பேன்.
கடைக்காரனிடமிருந்து ..உன் கையில் கிடைத்தால்..
நிச்சயம் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்னு...அவர் நினைத்தாரோ என்னவோ..
இன்னும் எங்கேயாவது கிளி சத்தம் கேட்டால் ஓடிப்போய் பார்க்கிறேன்..
உங்களைச் சேர்த்து வைத்தேன்..என்னை பார்க்க என்னிக்காவது வருவீங்களா என்று ஏக்கம் தான்.

No comments:
Post a Comment