Thursday, October 5, 2023

Madhyamar-மழை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#மழை


"மழை தூறல் போல இருக்கே.?

.குடை எடுத்திண்டியா..?

extra socks ஒன்னு bag ல இருக்கா?

ஈரக் காலோட இருக்காதே...

கொசு கடிச்சுட போறது. எங்க பார்த்தாலும் ஜுரம் வேற இப்போ..

careful ஆ இரு..(வெளியே  கிளம்பிய பெண்ணுக்கு advice மழை..

அம்மா..ப்ளீஸ் ...பெண் அலற ஆரம்பிக்க..

பை..சொல்லிட்டு கிளம்பிட்டாள்..


"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..!!...

நானே ..நானா..moment.


அந்தக்கால மழை நாட்கள்..சின்ன சின்ன இன்பங்கள்.. அனுபவங்கள்..


சின்னதாய் குளம் கட்டும்..(பத்து germs பத்தி பாடம் சொல்லாத அம்மா..dengue கொசு ..அப்படினா என்னனே தெரியாது)


சீறிப் பாயும்..கப்பலும்..கத்திக் கப்பலும்..

கரையேர முயற்சிக்கும்..கை தட்டி competition..


கொஞ்சம் வளர்ந்த நேரம்..படிப்பு சுமை ஏற ஆரம்பிச்ச நேரம்..

maths test லேர்ந்து தப்ப..மழை வேண்டி மனு... கண்டிப்பா...தள்ளுபடியாகிடும்..


மொட மொடனு கஞ்சி போட்ட ஆர்கண்டி புடவை காயணும்..சித்தி வேண்டிக் கொள்வாள்...(காய்ஞ்ச புடவை மடித்து எடுத்துவைக்கிற வேலை நம்முது..எங்கேயானும் ஒடஞ்சிடுமோனு ஒரே tension ஆகிடும்..தப்பித் தவறி மழை வந்ததோ...ஊருக்கே கூழ் ஊத்தலாம்..)..


மழை வந்தா..lending library காரன் இன்னியொட விகடன் தரமாட்டானே...ஐயோ வருண பகவானே..கொஞ்சம் கருணை காட்டுப்பா..பாட்டி வேண்டிப்பா..


ஒருவழியா ஒரு நாள் மழை வரும்.


புக் நனையாமல் அதுக்கு கவர் போட்டு...rain coat பையிலேர்ந்து எடுத்தால்..

அதுல அப்பா போட்டு வெச்சிருந்த டால்கம் பவுடர் கரைந்து ஓடும்..


ரெயின் கோட்டை  மழையில் நல்லா ஒரு  நனை நனைச்சுட்டு.....பத்தரமா உள்ள வைச்சுட்டு..

ஜாலியா சொட்ட சொட்ட நனைஞ்ச ..ஆட்டம் போட்ட  நாட்கள்..


ஆனால்..anti climax என்னாகும்னு சொன்னால்..


அடுத்த நாள் தொண்டை வலியுடன் சரவணன் டாக்டர் கிளினிக்கில் முனகும் நேரம்..

உண்மைவிளம்பி  தோழி ஒருத்தி பத்த வைப்பாள்..."aunty aunty..இவ என்ன பண்ணா தெரியுமோனு...வெந்த புண்ணுல வேல்..வரேன் இரு மவளே..கறுவிக் கொண்டே நான் ' துரோகி..என்று அவளைக் கண்ணால் எரிக்க.


"அதான் விஷயமா..ஆத்துக்கு வா..இருக்கு உனக்கு...  மீதி. வெள்ளித்திரையில்..(அம்மா மை.வாய்ஸ் ..)


நினைக்க நினைக்க சுகம்..

அப்பறம் சைக்கிள் கத்துண்ட கொழுப்பில்..உயிர்த் தோழியுடன் ஒரு கை விட்டு..ஒஹோ..மேகம் வந்ததோ பாடி மழையில் ஊர் சுற்றி (பெரிய ரேவதினு நினைப்பு)...


அப்பாவுடன் வாசற்படியில் அமர்ந்து..அப்பா சொல்லும் cloud movement ,forecast எல்லாம் ரசித்து..மெதுவாக ஆரம்பித்து..அப்படியே ஸ்பீட் எடுக்கும் மழையை, கரெண்ட்ட்டில்லா மெழுகு வர்த்தி இருட்டில்..மழை கதையும் அப்பா சேர்ந்து சொல்ல..


அந்த இருட்டில் "சரக் சரக் "என்று..காலணி சத்தம் ..எங்க காலனியின் நிசப்தத்தை கிழிக்கும்..

வேற யாரு..எங்கமா தான்..

Very sincere அரசு உயர் அதிகாரி..


☔ மழை நேரத்தில்  குழந்தை தனியா இருப்பேனே என்று ஓடி வந்து எனக்கு company கொடுக்கும்  அப்பா..உடனே..லாந்தர் விளக்கை எடுத்து வர..

அம்மா வீட்டுக்குள் நுழையும் போதே சுடச் சுட காஃபி கொடுத்து..உபசரிச்சதும்..

கொஞ்ச நேரத்தில்..

ஆவி பறக்க .. சாதமும் மிளகு ரசமும் அந்த மழைக்கு அம்மா பண்ணி,சொர்னு அந்த ரசத்தை உறிஞ்சு குடிக்கிற சுகம் இருக்கே..சொர்க்கம்..


சாப்பாடு கடை முடிஞ்சதும்..

"இன்னிக்கு எங்கே கரண்ட வரப்போறது"

..அம்மா டென்ஷனில் புலம்புவாள்...


ஒல்டேஜ் ஓவரா வந்தால் பல்பு புட்டுக்கும்னு அப்பா எத்தனை சொன்னாலும்..


"எதுக்கும் அந்த சமையல் ரூம்ல மஞ்ச பல்பு ஸ்விட்ச் போட்டு இருக்கட்டும்..அது தான் ராசியான லைட்டுனு ....அம்மா வேலை முடித்து நகர..


பல்பு வாங்கிய அப்பா..நாளைக்கு புது பல்பு ஒண்ணு வாங்க வேண்டியிருக்குமோனு கவலையில் இருப்பார்.


ஆஹா..எவ்வளவு ரம்மியமான நாட்கள்..


நினைவலையில் இருந்து வெளி வரச் சொன்னது ...வாசல் calling bell..


சொட்ட சொட்ட மழையில் நனைந்த என் பெண்..

ஐயோ ...நாந்தான் குடை எடுத்துண்டு கீழ வறேனே..அதுக்குள்ள..ஏண்டா நனைஞ்சிண்டு வந்தே..நான் சோக கீதம் பாட..


"it was fun maa.." அவள் சொல்லும்போது..கொசுவர்த்தி சுருள் சுத்தும் இந்த அகிலாவுக்கு..


அப்புறம் என்ன?


"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..

மனம் சூடான வடை தேடி அலைகின்றது .."


எங்க குடும்பப் பாட்டை ..

பாடியபடி..ஃப்ரிட்ஜில் இருக்கும் வடை மாவில் ..ஒரு நாலு மிளகும் தேங்காய்ப் பல்லும் போட்டு வடை..

அதை அப்படியே...சூடான மிளகு ரசத்தில் முக்கி எடுத்து...எங்க மழைக் கொண்டாட்டம் நடக்கும்..


நமக்கெல்லாம்..

மழை என்றால்..

#மெதுவடையும்_மிளகுரசமும் தான் ஞாபகம் வருது..நம்ம டிசைன் அப்படி😀

No comments: