#அப்பா_கணக்கு..
நீயும் போய் கேளு....கேட்டால் இல்லனு சொல்லிடுவாங்களா என்ன?..
அப்பா..இது என்ன கோயில் பிரசாதமா?..
Covaxin pa..
எத்தனை சொன்னாலும் சமாதானமாகாமல்..
நான் போய் கேட்கவா?..
அந்த நர்ஸ் பண்ணலாம்னு சொல்றாங்களே..ஏதோ டாக்டர் certificate போதுமாமே?..
உஸ் அப்பா..அப்பா..உன் கரிசனத்துக்கு அளவே இல்லையா?
பின்ன என்னம்மா..கோவிட் வந்தாலும் வந்தது..60+ எல்லாரும் அகத்துக்குள்ளே அடங்கி கிடக்க.
அயராமல் உழைக்கும் உன்னைப் போல 45+ குழந்தைகளை..(note the point . 45+ ஆனாலும் அப்பா அம்மாவுக்கு எப்போதும் குழந்தைகள் தான் நாம்.💃💃💃💃💃)
முதல்ல கவனிக்க வேண்டாமா?..
அன்புள்ள..அப்பா..என்னப்பா...
வரும்ப்பா வரும்..உங்களுக்கு கிடைச்ச இந்தக் கவசம்..எங்களுக்கும் இதோ வந்துடும்..
அப்பாவின் கரிசனம் ..அவர் கணக்கு..
அதுக்கு ஈடு இணை வேறெதுவும் உண்டா?..
எதுக்கும் இருக்கட்டுமேனு
#potato_stuffed_bread_sandwich 🥪🥪
#jam உடன் ஜம்முனு #bread_toast ,🌭
#சூடா_ஏலக்காய்_டீ flask ல்☕☕☕
#mdrama2019 biscuit 🍪🍪
#பெருங்காயம் போட்ட #மோர் ஒரு பாட்டிலில்,🍶🍶🍶🍶
கொஞ்சம் #மா_இஞ்சி கலந்த #தயிர் #சாதம்..😋😋😋😋
( vaccination க்கு போகற மாதிரி இல்லையே..எதோ vacation க்கு கிளம்பற மாதிரி இருக்கேனு பொண்ணு ஒரு கிண்டல் லுக்கு விட..😃😃😃😃😃)
முன்ன பின்ன லேட் ஆனால்..முன்னாடி மாதிரி sagar ,உடுப்பிக்குள் நுழைந்து ஒரு கட்டு கட்டவா முடியும்?..
ம்ம்ம்ம்..அப்பா..மாஸ்க்கை மூக்குக்கு மேலே போடுப்பா....போடுப்பானு .. imposition மாதிரி சொல்லிக் கொண்டே இருந்தேன்..
Systematic ஆக ,நாங்கள் சென்ற மருத்துவமனையில் வேலை நடக்க...
..கட்டுசாதம் எல்லாம்..வீட்டுக்கு வந்து ஒரு கட்டு கட்டியாச்சு..💪😃😃😃😃😋😋

No comments:
Post a Comment